உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

77

ஒரு சொற்றொடரில் பல (தலைமைக்) கருத்துகளிருப்பினும், ஒரே சொற்றொடருக்கேற்ற செய்தி பல சிறு சொற்றொடர்களாக எழுதப்படினும், ஒரு சொற்றொடராவது அதன் இடைப்பிற வைப் பாவது (paranthesis) மிக நெடிதாயிருப்பினும், சொற்றொட ரொருமைப்பாடு கெடும். இதை யறிந்து கடைப்பிடிக்க.

xvii. ஒருபோகமைப்பு (Parallel Construction)

ஒரு பெருஞ் சொற்றொடரின் பகுதிகளான சொற்றொடர்க ளெல்லாம், ஒரே போக்கான அமைப்பாயிருப்பது ஒருபோகமைப்பாகும்.

எ-டு: உயர்ந்தோர் பிறர் குணங்களையே எடுத்துக் கூறுவர். தாழ்ந்தோர் பிறர் குற்றங்களையே எடுத்துக் கூறுவர். இங்ஙனமன்றி,

உயர்ந்தோர் பிறர் குணங்களையே எடுத்துக் கூறுவர்; பிறர் குற்றங்களையே தாழ்ந்தோர் எடுத்துக் கூறுவர்.

என்பது ஒருசார் வழுவாகும்.

ஒரு வினைகொண்டு முடியும் ஒரு சொற்றொடரின் உறுப்பு களான பல தொடர்களில் ஒன்று, ஓர் ஈறு அல்லது வேற்றுமை யுருபு பெறின், பிறவும் அவற்றைப் பெறும்.

டு : ஒரு நூலை யாராய்பவர் அந் நூற்பொருளில் தேர்ந்தவராயும் நடுநிலையராயு மிருத்தல் வேண்டும்.

xviii. உம்மைத்தொடர், உம் (The Conjunction உம்)

எண்ணும்மை : பல சொற்கள் அல்லது சொற்றொடர்கள் உம்மைச் சொல்லால் இணைக்கப்படின், சொற்றொறும் அல்லது சொற்றொடர் தொறும் உம்மை வேண்டும்.

எ - டு : அறமும் பொருளும் இன்பமும் வீடும்.

முதலிய என்னும் குறிப்புப் பெயரெச்சத்திற்கு முற்படும் பெயர்கள், உம்மை யேற்றவிடத்தும் ஏலாவிடத்தும் முதல் வேற்றுமையிலேயே இருத்தல் வேண்டும்.

எ - டு : உழவு கைத்தொழில் வாணிகம் முதலிய, உழவும் கைத் தொழிலும் வாணிகமும் முதலிய - திருத்தம்.

உழவையும் கைத்தொழிலையும் முதலிய வழு.