உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




112

எ-டு : கடவுள் இருக்கிறார்.

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கதிரவன் கிழக்கில் தோன்றுகிறது.

கால வழுவமைதி

விரைவு மிகுதி (பெரும்பான்மை), தேற்றம் (நிச்சயம்) ஆகிய முப்பொருள்பற்றி, எதிர்கால வினைகள் இறந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் கூறப்பெறும்.

எ-டு: இதோ ஐந்து நிமையத்திற்குள் வந்தேன், வருகிறேன் - விரைவு படித்தால் தேறினான், தேறுகிறான் - மிகுதி நஞ்சுண்டால் செத்தான், சாகிறான் – தேற்றம்

12. ஒப்பீட்டுத்தரங்கள்

(Degrees of Comparison)

பொருள்களைக் குணங்களில் ஒன்றோடொன்று ஒப்பிடும் போது கவனிக்கப்படும் தரங்கள் மூன்று. அவை,

(1) ஒப்புத்தரம் (Positive Degree) (2) உறழ்தரம் (Comparative Degree)

(3) உச்சத்தரம் (Superlative Degree) என்பன.

இரு அல்லது பல பொருள்கள் ஏற்றத்தாழ்வின்றி ஒத்திருப் பின் ஒப்புத்தரமாம்; ஒன்றைவிட இன்னொன்று உயர்ந்திருப்பின் உறழ்தரமாம்; ஒரு பொருளினத்தில் தலைசிறந்து அல்லது உச்சநிலையில் இருப்பது உச்சத்தரமாம்.

ஒப்புத்தரம், அன்ன இன்ன அச்சில் இசைய ஆட்டம் ஒப்ப கணக்காய் சமமாய் சரியாய் நிகர நேர போல முதலிய உவமையுருபு களால் உணர்த்தப்பெறும். இது 2ஆம் வேற்றுமையும், 3ஆம் வேற்றுமையும், 4ஆம் வேற்றுமையும், சிறுபான்மை 5ஆம் வேற்றுமையும் ஏற்கும்.

எ-டு : அரங்கன் அண்ணாமலையைப்போல் நல்லவன்.

நாயோடொப்ப நன்றியறிவுள்ள உயிரி வேறொன்றுமில்லை. பூவரச வயிரம் உறுதியில் தேக்கிற்கு ஒப்பானது.

காக்கையின் கரியது களம்பழம்.

காக்கையின்

=

காக்கையைப்போல்.

உறழ்தரம் பின்வருமாறு பலவகையில் உணர்த்தப்பெறும்:

(1) விட காண காணின் காட்டில் நோக்க முதலிய சொற்களுள் ஒன்றுடன் வரும் 2ஆம் வேற்றுமையால்,