உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

காலொடிவான் விழுந்தான் முதல்வினையாகிய பிறிதின்வினை யான்கொள்வான் கொடுத்தான் - வேறு முதல்வினையாகிய பிறிதின்வினை

படித்தற்கு வந்தான்- முதல்வினையாகிய தன்வினை கையுரத்தற்குக் காய்த்தது - சினைவினையாகிய தன்வினை விழுதற்குக் கைதவறினது - சினைவினையாகிய பிறிதின்வினை கால்நோதற்கு நடந்தான் - முதல்வினையாகிய பிறிதின்வினை யான் உண்டற்குக் கொடுத்தான் வேறு முதல்வினையாகிய

பிறிதின்வினை

-

செய்தற்கு என்னும் வினையெச்சம்,

111

உலகவழக்கில், செய்யாமைக்கு ஏதுவாக என்று பொருள்படவருவது முண்டு.

எ-டு: யான்போதற்குக் காலில் கட்டி புறப்பட்டிருக்கின்றது.

குறிப்பு : செய்தற்கு என்னும் வினையெச்சம் 4ஆம் வேற்றுமையேற்ற தொழிற் பெயராதலின், செய்கிறதற்கு செய்வதற்கு என்னும் வடிவுங் கொள்ளும்.

செய்வான் செயற்கு என்னும் ஈரெச்சங்களுள், முன்னது இலக்கிய நடைக்கும் பின்னது பொதுநடைக்கும் உரியவாம்.

செய்யவில்லை என்னும் வாய்பாட்டு எதிர்மறை வினை முற்றும், செய்யாமை என்னும் வாய்பாட்டு எதிர்மறைத் தொழிற்பெயரும், முக்காலத்திற்கும் பொதுவாம்.

எ-டு : நேற்றுச் செய்யவில்லை இன்று செய்யவில்லை

இ.கா.

நி.கா.

நாளைச் செய்யவில்லை

எ.கா.

நேற்றுச் செய்யாமை

இ.கா.

இன்று செய்யாமை

நி.கா.

நாளைச் செய்யாமை

எ.கா.

வழக்கவினைக் காலம்

மக்கள் வழக்கமாகச் செய்யும் தொழில்வினைகளை நிகழ் காலத்திலாவது எதிர்காலத்திலாவது கூறுதல் வேண்டும்.

எ-டு : தச்சன் மரவேலை செய்கிறான், செய்வான்.

முக்கால நிகழ்ச்சிவினைக் காலம்

முக்காலத்தும் தொடர்ந்து நிகழும் வினைகளை,

நிகழ்காலத்திற் குறித்தல்வேண்டும்.