உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




114

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

உச்சத்தரம் பின்வருமாறு பல வகையில் உணர்த்தப் பெறும்: (1) 4ஆம் வேற்றுமைப் பெயரையடுத்த சிறப்புச் சொல்லால்,

எ-டு : கீழ்நாட்டுப் பூவிற்குச் சிறந்தது தாமரை.

கோவைக்குச் சிறந்தது திருக்கோவை.

(2) 7ஆம் வேற்றுமைப் பெயரையடுத்த சிறப்புச் சொல்லால்,

எ-டு : புறஉறுப்பிற் சிறந்தது கண்.

அறநூலிற் சிறந்தது திருக்குறள். பறவையினத்திற் பெரியது தீக்கோழி.

(3) மிகமிக என்னும் அடுக்குச்சொல்லால், இதற்கு எடுத்துக்காட்டு கூட்டுவாக்கியமாக வரும்.

எ-டு : எருமை பெரியது; யானை மிகப் பெரியது; திமிங்கிலம் மிகமிகப் பெரியது.

வெள்ளி ஒளியுள்ளது; திங்கள் மிக ஒளியுள்ளது; கதிரவன் மிகமிக ஒளியுள்ளது.

(4) நனிமிக கழிபெரு முதலிய மீமிசைச் சொற்களால், இதற்கும் எடுத்துக்காட்டுக் கூட்டுவாக்கியமாகத்தான் வரும். எ-டு : துரும்பு நொய்யது; பஞ்சு மிக நொய்யது; வறியவன் ந னி மி க நொய்யன். (நொய்ம்மை = கனமின்மை)

ஒருவனுக்கு உடல்நலமிருப்பின் மகிழ்ச்சிக் கிடமாம்; அத னொடு செல்வமிருப்பின் பெருமகிழ்ச்சிக் கிடமாம்; அவற்றொடு கல்வியுமிருப்பின் கழிபெரு மகிழ்ச்சிக் கிடமாம்.

(5) தலைசிறந்த என்னும் பெயரெச்சத்தாலும் தலைசிறந்தவன் தலைசிறந்தவள் முதலிய முற்றுச்சொற்களாலும்,

எ-டு : அகத்தியம் முத்தமிழும்பற்றியதாதலால் தலைசிறந்த இலக்கணமாகும்.

இற்றையுலகில், செருமானியர் மதிவளர்ச்சியில் தலை

சிறந்தவராகக் கருதப்படுகின்றனர்.

(6) எல்லாவற்றிலும் பெரியது என்பது போன்ற தொடரால்,

எ-டு : எல்லாப் புலவருள்ளும் சிறந்தவர் திருவள்ளுவர்.

நகரங்க ளெல்லாவற்றிலும் பெரியது இலண்டன் (மாநகரம்)