உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

115

முத்தரங்களையும் ஒருங்கே கூறுவதற்குத் தலை இடை கடை என்னும் சொற்களும் பயன்படும். ஆனால், இவை முத்தரங்களையும் இணைத்துக் கூறா.

எ-டு: பயிர்செய்யும் நிலங்களுள் மருதம் தலை; முல்லை இடை;

குறிஞ்சி கடை.

சொன்னதிற்கு மேலும் அறியும் மாணவர் தலையாயவர்; சொன்னதையே அறியும் மாணவர் இடையாயவர்; சொன்னதையும் அறியாத மாணவர் கடையாயவர்.

இனி, எண்ணலளவைப்

தரத்தைக் குறிப்பதுமுண்டு.

பெயர்களால் பொருள்களின்

எ-டு : முழுப்புல்லை; முக்கால் மயிலை; அரைச்சிவலை; கால் கருப்பு

இம் முறையால், மூன்றிற்கு மேற்பட்ட தரங்களையும் குறிக்கலாம்.

உறழ்தர முறையாலும், பலதரங்களைக் குறிக்கலாம்.

எ-டு : குறளினும் நெடியது சிந்து; சிந்தினும் நெடியது அளவு; அளவினும் நெடியது நெடில்; நெடிலினும் நெடியது கழிநெடில்.

எல்லாக் குணங்களிலும்

பொருள்கட்குள்ள முத்தரங் களையும் தமிழில் ஒழுங்காய்க் கூறவேண்டுமாயின், இரு வாய்

பாடுகளைக் கையாளலாம்; ஒன்று,

நல்லது, அதைவிட நல்லது, எல்லாவற்றிலும் நல்லது, என்பது;

இன்னொன்று,

நல்லது, மிகநல்லது, மிகமிக நல்லது, என்பது.

எ-டு: (1) புல்லாங்குழற்குக் கருங்காலி நல்லது; வெண்கலம் அதைவிட நல்லது; மூங்கில் எல்லாவற்றிலும் நல்லது.

கொக்கு வெளிது; பால் கொக்கைவிட வெளிது; பஞ்சு எல்லாவற்றிலும் வெளிது.

(2) புல்லாங்குழற்குக் கருங்காலி நல்லது; வெண்கலம் மிக

நல்லது; மூங்கில் மிகமிக நல்லது.

கொக்கு வெளிது; பால் மிக வெளிது; பஞ்சு மிக மிக வெளிது.

இவற்றுள் முன்முறை சிறந்தது. அதைவிட என்னும் உறழ் சொல்லுக்குப் பதிலாக, அதினும் என்பதையும் பயன்படுத்தலாம்.