உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

பாட்டுச் செயப்படுபொருள் குன்றிய வினை (Intransitive Verb of Incomplete Predication) என்றும், செயப்படுபொருள் குன்றாவினை யாயின் முடியாப் பயனிலைப்பாட்டுச் செயப்படு பொருள் குன்றாவினை (Transitive Verb of Incomplete Predication or Facitive Verb) என்றும் கூறப்படும்.

தமிழ்நாட்டுக் காங்கிரசுக் கட்சியினர், ஓமந்தூர் இராமசாமி இரெட்டியாரை, 1947ஆம் ஆண்டில், சென்னை மாகாண முதலமைச்சர் ஆக்கினர்.

இவ் வாக்கியத்தில், 'தமிழ்நாட்டுக் காங்கிரசு என்பது எழுவாயடை; ‘1947ஆம் ஆண்டில்' என்பது பயனிலையடை; 'ஓமந்தூர்', 'இரெட்டியார்' என்பன செயப்படு பொருளடை; 'சென்னை மாகாண முதலமைச்சர்' என்பது நிரப்பியம்.

மூவகை அடைகளும் பற்பலவாய் அடுக்கியும் வரும். இதுவே வாக்கியம் நீள்வதற்குக் காரணம்.

எ-டு : ஓர் அழகான கொண்டைக்கிளி, பலநாளாக என் தோப்பிலுள்ள

இதில்,

மாம்பழங்களையெல்லாம்,

நடுச்சாலை கொத்திவருகின்றது.

தாறுமாறாய்க்

ஓர், அழகான, கொண்டை எழுவாயடை பலநாளாக, தாறுமாறாய் - பயனிலையடை என் தோப்பிலுள்ள, நடுச்சாலை, மா, எல்லாம் செயப்படுபொருளடை

குறிப்பு : கொத்திவருகின்றது என்பது ஒரு சொல். வருகின்றது என்பது இங்கு தொடர்ச்சி குறிக்கும் துணைவினையேயன்றி, வருதல் தொழிலைக் குறிக்கும் தனிவினை யன்று.

கொத்தி வருகின்றது என்பது, கொத்திக்கொண்டு நடந்து அல்லது பறந்து வருதலைக் குறிப்பின், வருகின்றது என்பது பயனிலையும், கொத்தி என்பது பயனிலை யடையுமாகும்.

முன் விளக்கியபடி, சில வாக்கியங்களில், எழுவாய் அல்லது பயனிலை அல்லது செயப்படுபொருள் தொக்கு நிற்கும்.

தனிவாக்கியக் கூறுபடுப்பைக் கீழ்வருமாறு கட்டமிட்டுக்

காட்டலாம்.