உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




128

(17)

(18)

(19)

(20)

(21)

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

அவன் செய்த நன்மையையே நினைத்துக்கொண்டிருக் கும்; அதுபோல, பெரியோர் ஒருவர் செய்த தீமையை யெல்லாம் மறந்துவிடுவர்; அவர் செய்த நன்மையையே நினைத்துக் கொண்டிருப்பர்.

தந்தை மக்களைப் படிக்கவைக்க வேண்டும்; அல்லது அவர்க்குப் பணந்தேடி வைக்கவேண்டும்.

ங்கிருப்பவர் முருகன் அழகன் நம்பி ஆகிய மூவரே; ஆகையால், இதை முருகன் செய்திருக்கவேண்டும்; அல்லது அழகன் செய்திருக்கவேண்டும்; அல்லது நம்பி செய்திருக்கவேண்டும்; இவரைத் தவிர வேறு யார் செய்திருக்க முடியும்?

பணமாய்க் கொடு; இல்லாவிட்டால் பண்டமாய்க் கொடு. உலகங்களை யெல்லாம் உருவாக்குகிறவரும் கடவுள்; அவற்றை நிலைபெறுத்துகிறவரும் கடவுள்; அவற்றை அழிக்கிறவரும் கடவுள்.

நாய் தாழ்ந்த விலங்குதான்; இருந்தாலும் அதன் நன்றியறிவு இலக்கத்தில் ஒருவர்க்குக்கூட இல்லையே!

(22) சோம்பேறிகள் எறும்பைக் கவனிக்கவேண்டும்; சொந்த னத்தை வெறுப்பவர் காகத்தைக் கவனிக்கவேண்டும். (23) ஓரறிவு ஊறு (ஸ்பரிசம்); ஈரறிவு அதனொடு சுவை; மூவறிவு அவற்றொடு நாற்றம்; நாலறிவு அவற்றொடு காட்சி; ஐயறிவு அவற்றொடு கேள்வி; ஆறறிவு அவற்றொடு கருத்து.

(24)

உணவு சமைக்கக் காயறுப்பதும் கத்தி; உயிரைப் போக்கக் கழுத்தறுப்பதும் கத்தி; ஆகவே, ஒவ்வொரு பொருளாலும் நன்மையுமுண்டு, தீமையுமுண்டு; நன்மைக்கு ஒன்றைப் பயன்படுத்தல் வேண்டும்; தீமைக்குப் பயன்படுத்தல் கூடாது.

கலப்புவாக்கியக் கூறுபடுப்பு

கலப்பு வாக்கியத்தைக் கூறுபடுத்தும்போது, முதலாவது, முழுவாக்கியத்தையும் ஒன்றாகக்கொண்டு தனிவாக்கியம்போற் கூறுபடுத்தல்வேண்டும்; பின்பு, அதன் கிளவியங்களையெல்லாம் பிரித்துக்கொண்டு, எவ்வொரு கிளவியமாகக் கூறுபடுத்தல் வேண்டும். இணைப்புச் சொல்லைத் தனியே குறித்தல்வேண்டும்.

கிளவியங்களுள், தலைமைக் கிளவியத்தை முன்னும் சார்பு கிளவியங்களைப் பின்னும் கூறல்வேண்டும்.

பெயர்க்கிளவியம் : எழுவாய், செயப்படுபொருள், பெயரொட்டு (Noun in Apposition), நிரப்பியம் என்னும் நால்வகையாய் வரும்.