உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




130

குறிப்பு :

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(1) மேற்காட்டிய வாக்கியத்தில் 'தாம்' என்பது யெழுவாய்.

தாகை

(2) தலைமைக் கிளவியப் பயனிலையும் சார்பு கிளவியப் பயனிலையும் போல ஒரே யெழுவாய்க்குரிய பயனிலைகள் வரும் வாக்கியத்தை, தனிவாக்கியமாகவே கொள்ளல் வேண்டும்.

எ-டு : எருது கொழுத்தால் தொழுவத்தில் இராது.

இதில், 'கொழுத்தால்' என்பது பயனிலையடையாதலின், இவ் வாக்கியம் தனி வாக்கியமாகும்.

எருது கொழுத்தால் (அது) தொழுவத்தில் இராது என்று சுட்டுப்பெயர் இடையில் விரித்தல் கூடாது.

(3) திட்டமற்ற தொகை யெழுவாயைக்கொண்ட சார்பு கிளவியத்தை, தனிக்கிளவியமாக்காது தலைமைக் கிளவியப் பயனிலைக்கு அடையாக்குவது, மாணவர்க்கு எளிதாம்.இம் முறைப்படி கலப்பு வாக்கியம் தனிவாக்கியமாகும்.

எ-டு : எந்நிலத்தில் விதைத்தாலும் எட்டிக்காய் தெங்காகாது.

தை, (ஒருவன்) எந்நிலத்தில் விதைத்தாலும் எட்டிக்காய் தெங்காகாது, என விரிப்பின், இது கலப்பு வாக்கியம். 'எந்நிலத்தில் விதைத்தாலும்' என்பதைத் 'தெங்காகாது' என்னும் பயனிலைக்கு அடையாக்கி, இவ் வாக்கியத்தைத் தனிவாக்கியமாகக் கொள்வது கீழ்வகுப்பு மாணவர்க்கு ஏற்றது.

(4) தலைமைக் கிளவியத்தில் எழுவாயேனும் பயனிலை யேனும் தொக்கியிருப்பின், அதை விரித்தே தீரல் வேண்டும்.

எ-டு : எமன் ஏறுகிற கடாவாயிருந்தாலும் உழுதுவிடுவான்.

இதில், (அவன்) உழுதுவிடுவான் என்பது, தலைமைக் கிளவியம்; 'அவன்' தொகை எழுவாய்.

இத்தகைய வாக்கியங்கள் இடர்ப்பாட்டை விளைப்பதால், அவற்றைத் தனிவாக்கியமாகக் கொள்வதே மாணவர்க்கு ஏற்றதாம்.

மேற்கூறிய ‘எமன்... விடுவான்' என்னும் வாக்கியத்தை, கீழ் வகுப்பு மாணவர் மேல்வகுப்பு மாணவர் புலவர் ஆகிய முத்திறப் பட்டோரும், தத்தம் அறிவுநிலைக்கேற்றபடி, கீழ்க்காணும் முறையே, மூவகையாகக் கூறுபடுத்தலாம்.

‘எமன் ஏறுகிற கடாவாயிருந்தாலும்' என்பதை, (பயனிலை யடையான) ஒரு தொடர்மொழியாகக் கீழ்வகுப்பு மாணவரும், ஒரு