உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

131

கிளவியத்தை உள்ளிட்ட தொடர்மொழியாக மேல்வகுப்பு மாணவரும், கொள்ளலாம். '(அது) எமன் ஏறுகிற கடாவா யிருந்தாலும்' என விரித்து, அதை ஒரு கிளவியத்தை யுள்ளிட்ட கிளவியமாகக் கொள்வது புலவர்க்கு ஏற்றதாம்.

(5) தலைமைக் கிளவியப் பயனிலையும் சார்பு கிளவியப் பயனிலையும் ஒரே எழுவாய்க்குரியவேனும், அவை முதல் வினையும் சினை வினையுமாகப் பிரித்துக் கூறப்படும் வாக்கியத்தைக் கலப்பு வாக்கியமாகவே கொள்ளல் வேண்டும்.

எ-டு: நீ கட்குடித்தால் உன் கண் சிவக்கும். நான் நடந்தால் ஏன் கால் நோகும்.

கண் இருண்டால் உடல் இருளும் கால் ஓய்ந்தால் உடல் சோரும்

-

முதல் வினையும்

-சினை வினையும்

- சினை வினையும்

- முதல் வினையும்

(6) சார்புகிளவியப் பயனிலை முதல் வினையாயிருக்கும் வாக்கியத்தில் அம் முதலைக் குறிக்கும் எழுவாய் தொக்கிருப்பின், அவ்வாக்கியத்தைத் தனி வாக்கியமாகக் கொள்ளலாம்.

எ-டு : கட்குடித்தால் கண் சிவக்கும்.

நடந்தால் கால் நோகும்.

இவற்றுள் :

1ஆம் வாக்கியத்தில் உள்ள ‘கட்குடித்தல்' வினைமுதலுக்கே உரியது; 2ஆம் வாக்கியத்திலுள்ள 'நடத்தல்' வினைமுதலும் சினையும் ஆகிய இரண்டிற்கும் உரியது. ஆயினும், இவ் வி விரு வாக்கியங்களையும், வாக்கியக் கூறுபடுப்பில், ஒரு தன்மையவாகக் கொள்ளலாம்.

திட்டமற்ற எழுவாய்கள் தொக்கு நிற்கும் வாக்கியங் களிலெல்லாம், இயன்றவரை அவ் வெழுவாய்களை விரிக்காம லிருத்தலே, மாணவர்க்கு ஏற்றதாம்.

'கட்

இம் முறைப்படி, மேற்காட்டிய வாக்கியங்களில், குடித்தல்', 'நடந்தால்' என்பவை பயனிலையடைகளாகக் காள்ளப்படும்.

குற்றமற்ற அறிஞர் கூடிய களம், இறையுருவம் இருக்கும் இடம்போல, வானவரும் வணங்குமாறு தெய்வத்தன்மை வாய்ந்ததாகும்.

இது ஒரு கலப்பு வாக்கியம். இதன் கூறுபடுப்பு வருமாறு: