உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

139

(3) பாலெல்லாம் ஆவின் பாலாகுமா? அதுபோல, நூலெல்லாம் வள்ளுவர் நூலாகுமா? என்று பாடியவர் யார்?

(4)

(6)

(7)

(8)

(9)

(10)

(11)

சிலர் இயேசுவினிடம் வந்து, "அரையனுக்கு வரி செலுத்துவது முறையா? முறையன்றா?" என வினவிய போது, அவர் அரையனுடையதை அரையனுக்கும் ஆண்டவனுடையதை ஆண்டவனுக்கும் செலுத்துங்கள்”

என்றார்.

66

(5) "காதல்பற்றிச் சிறுவனை யானை யென்றலும் ஆகுபெயராமன்றோவெனின் : யாதானுமோர் இயைபு பற்றி ஒன்றன் பெயர் ஒன்றற்காயது ஆகுபெயராம்; இயைபு கருதாது காதல் முதலாயின வற்றான் யானை யென்றவழி ஆகுபெயருள் அடங்காவென்பது”.

"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமென் றாரும் அறிந்திலார் அன்பே சிவமென் றாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே."

இருதுபன்னன் தன் வலவனாகிய நளனை நோக்கி, "மேலாடை வீழ்ந்தது, எடு” என்றான்.

"பாலுக்குப்போடச் சர்க்கரையில்லை என்பார்க்கும், பருக்கையற்ற கூழுக்குப்போட உப்பில்லை என்பார்க் கும், காலுக்குப் போடச் செருப்பில்லை என்பார்க்கும், பல்லக்கின் மேலுக்குப் போட மெத்தையில்லை என்பார்க்கும், கவலை ஒன்றா? வேறா?

காண்டாமாவும் காட்டெருமையும் போர் செய்யின் எதுவெல்லும் எது தோற்கும் என்று, சொல்வதரிது. என்னதை உண்போம்? என்னதைக் குடிப்போம்? என்று நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்.

ஆறு கடக்குமட்டும் அண்ணன் தம்பி என்றான்; அதற்குப்பின் நீ யார் நானார் என்கிறான்.

(12) "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும்”, என்றார் சுந்தரம் பிள்ளை.