உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




140

(13)

66

(14)

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

'எண்ணான்கு முப்பத் திரண்டுபற் காட்டி யிசையுடனே பண்ணாகச் செந்தமிழ் பாடி வந்தாலும்இப் பாரி

லுள்ளோர்

அண்ணாந்து கேட்பர் அழகழ கென்பர் அதன்பிறகு சுண்ணாம்பு பட்ட இலையும்கொ டார்கவி

சொன்னவர்க்கே”

"இட ட்டமுடன் முதலியார் வாங்கிவந்த காளைதினம் இருபோர் தின்னும்

சட்டமுடன் கொள்ளுண்ணும் புல்லுண்ணும் அதைப் பண்டி தன்னிற் பூட்டக்

கிட்டவரின் முட்டவரும் தொட்டவர்மே லேகழியும் கீழே வீழும்

எட்டாள்கள் தூக்கிடினும் தடிகொண்டு தாக்கிடினும் எழுந்தி ராதே.”

66

(15) 'காரென்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது நீரென்று பேர்படைத்தாய் நீணிலத்தில் வந்ததற்பின்

வாரொன்று பூண்மார்பத் தாய்ச்சியர்கை யுற்றக்கால் மோரென்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.'

(16) "பெருமாளும் நல்ல பெருமாள் அவர்தம் திருநாளும் நல்ல திருநாள் - பெருமாள்

(17)

இருந்த இடத்தில் இராமையினால் ஐயோ பருந்தெடுத்துப் போகிறதே பார்.'

"நச்சரவம் பூண்டதில்லை நாதரே தேவரீர் பிச்சையெடுத் துண்ணப் புறப்பட்டும் - உச்சிதமாம் காளமேன் குஞ்சரமேன் கார்க்கடல்போ முழங்கும் மேளமேன் ராசாங்க மேன்.'

(18) “கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் அரிசிவரும் - குத்தி

உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை யன்னம் லையிலிட வெள்ளி எழும்."

(19) “ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்

-

மூடித் திறக்கின் முகங்காட்டும் ஓடிமண்டை

பற்றின் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம் உற்றிடுபாம் பெள்ளெனவே ஓது."