உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

141

(20) 'ஒருசொல் வெல்லும், ஒருசொல் கொல்லும்' என்பது பழமொழி.

(21)

(22)

(23)

ஒருவரையொருவர் புதிதாகக் கண்டால், உங்கட்குப் பிள்ளை எத்தனை பெண் எத்தனை என்று வினவுவது வழக்கம்.

கண்ணிற்குக் கண் பல்லிற்குப் பல்' என்பது பழைய ஏற்பாட்டுக் கொள்கை.

எருமை மாட்டின்மேல் எத்தனை சூடு இருந்தாலும் தெரியாது, பசுமாட்டின்மேல் ஒரு டு இருந்தாலும் தெரியும்.

(24) தென்னை மரத்தில் ஏனடா ஏறினாய் என்றால், புல்பிடுங்க ஏறினேன் புல்லில்லை என்கிறான்.

(25)

கல்லுக்குள் இருக்கும் தேரையையும் முட்டைக்குள் இருக்கும் குஞ்சையும் ஊட்டி வளர்ப்பவர் யார் என்று தெரியுமா? தெரியாதா?

குறிப்பு : கதம்பவாக்கியங்கள் மிக நீண்டிருந்தால், அவற்றைக் கிளவியங்களாகப் பிரித்தாலும் போதும். கீழ்வகுப்பு மாணவர் கதம்ப வாக்கியத்தைக் கலப்பு வாக்கியமாகவே கொள்ளலாம்.

1. தனிப்பெயர்

14. வாக்கியப் பகுதிகளின் வடிவுகள்

1. எழுவாய் வடிவுகள்

எ-டு : மழை பெய்கிறது - பொருட்பெயர்

அவன் பெரியவன் சுட்டுப்பெயர்

படிப்பு ஒவ்வொருவனுக்கும் வேண்டும் தொழிற்பெயர் காளை வந்தான் ஆகுபெயர்

-

போனது வருமா?

2. பல பெயர்

வினையாலணையும்பெயர்

எ-டு: சேர சோழ பாண்டியர் தமிழ்நாட்டைத் தொன்றுதொட்டு

ஆண்டு வந்தவர்.

நீயும் நானும் போவோம்.

3.தொடர்மொழி

எ-டு : நன்றி மறப்பது நன்றன்று.

கூலி வாங்கிவிட்டு வேலை செய்யாதவன் கொள்ளைக்காரன்.