உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




142

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான்.

4. அன்மொழித்தொகை

எ-டு : தேன்மொழி வந்தாள்.

5. உரிச்சொல்

கயந்தலை நீருண்ணுகின்றது.

கயந்தலை = யானைக்கன்று, குழவி.

எ-டு : சீர்த்தி உலகப் பேறுகளுள் ஒன்று. சீர்த்தி = மிகு புகழ்.

6. நிகழ்கால வினையெச்சம் (Infinitive)

எ-டு : அவனுக்குப் பாடத்தெரியும்.

இந்தக் குழந்தைக்குப் பேசத்தெரியுமா?

இவற்றில், பாட என்பது பாடுதல் என்றும், பேச என்பது எவ்வகையிலும் வேறெழுவாய் காட்ட முடியாமையையும் காண்க. பாட்டுப் பாடத் தெரியும் என்பதிலும், பாட்டு என்பது பாட என்னும் வினைக்குச் செயப்படுபொருளேயன்றித் தெரியும் என்னும் வினைக்கு

பேசுதல் என்றும் பொருள்படுவதையும்,

எழுவாயன்று. எனக்கு வரத்தெரியும் என்பதில், வரவு வரத்தெரியும் என்று விரித்தற் கிசையாமையையும் கண்டுகொள்க.

7. பிறவகையான ஏதேனுமொருசொல் அல்லது ஒலி

எ-டு : இறைஞ்சி வணங்கி.

இன்னும் கொஞ்சநேரத்தில் 'டிங்' ஒலிக்கும்.

முதல் வாக்கியத்தின் பொருள் : இறைஞ்சி என்பது வணங்கி என்று பொருள்படும் என்பது.

இரண்டாம் வாக்கியத்தின் பொருள் : இன்னும் கொஞ்ச

நேரத்தில் டிங் என்னும் ஒலி கேட்கும் என்பது.

8. பெயரல்லாத ஏதேனுமொரு தொடர்மொழி

"தோள்கண்டார் தோளே கண்டார்' மிக நல்ல செய்யுள்.

எ-டு : 'டிங்கி நானே' உனக்குத் தெரியுமா?

டிங்கினானே - மரத்தைப் பிடுங்கினானே என்பதை மரத்தேப்பூ

டிங்கினானே என ஒருவன் பிரித்துப் பாடிய வரலாறு.