உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

9. ஒரு கிளவியம்

143

எ-டு : தீமையினாலும் நன்மை வரும் என்பது, அறிஞர் கூறியதும் பலர் தம் வாழ்க்கையிற் கண்டறிந்ததுமான உண்மை.

இதில், 'தீமையினாலும் நன்மை வரும்' என்பது எழுவாய். 10. கிளவியத்தை உள்ளிட்ட கிளவியம்

எ-டு : தீமையினாலும் நன்மைவரும் என்று அவர் சொன்னது உனக்கு நினைவிருக்கிறதா?

இதில் ‘தீமையினாலும் நன்மை வரும்' என்பது ஒரு கிளவியம். அதை யுள்ளிட்ட கிளவியம் ‘தீமையினாலும்... சொன்னது' என்பது.

குறிப்பு: விளிவேற்றுமைப்பெயர் வரும் வாக்கியங்களில் முன்னிலைப் பெயரும் (தொக்கேனும் வெளிப்பட்டேனும்) வருவதனாலும், சில பயனிலைகளோடு விளிப்பெயர் இ சையாமையாலும், விளிப்பெயரை எழுவாயாகக் கூறாது தனிப்படப் பிரித்துக் கூறுவதே பொருத்தமாம்.

எ-டு: (1) பொன்னா! சென்னை போ.

(2) GLIT GOT 60TIT! நீ சென்னை போ.

(3) பொன்னா! நீ சென்னை போகவேண்டும்.

(4) பொன்னா! உன்னைச் சென்னைக்கு மாற்றியிருக்கிற

தினால் நீ அங்கே போகவேண்டும்.

இவற்றுள், முன்னிரு வாக்கியங்களிலும் முன்னிலைப் பெயர் தொக்கும் வெளிப்பட்டும் வருவதையும், பின்னிரு வாக்கியங்களிலும் முன்னிலைப் பெயரின்றி விளிப்பெயர் பயனிலையொடு பொருந்தா மையையும் காண்க.

தனால், வாக்கியப் பிரிப்பில், எழுவாய்க்குரிய கட்டத்தில் அல்லது இடத்தில், 'நீ' எழுவாய், ‘பொன்னா' விளிப்பெயர், என்று குறிப்பதே பொருத்தமாகும்.

செயப்படுபொருள் வடிவுகள்

செயப்படுபொருளும் சொன்னிலையில் எழுவாயை ஒத்திருத்தலின் எழுவாய் வடிவுகளைத் தானும் அடையும். அவை வருமாறு:

1. தனிப்பெயர்

எ-டு : வண்ணம் பாடுவதில் யார் அருணகிரியாரை வென்றவர்?