உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




144

2. பல பெயர்

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

எ-டு : சேரசோழ பாண்டியரை அசோகனும் வெல்ல முடியவில்லை .

3. தொடர்மொழிப் பெயர்

எ-டு : மதுரைக் கூலவாணிகனார் சீத்தலைச்சாத்தனாரை மதப்பற்று ஓரளவு மடம்படுத்திற்று.

4. அன்மொழித்தொகை

எ-டு : நால்வாயைப்போல் அசைகின்றது நாவாய். நால்வாய் = யானை. நாவாய் = கப்பல்.

5. உரிச்சொல்

எ-டு : சீர்த்தியை யாரும் விரும்புவர்.

6. நிகழ்கால வினையெச்சம்

எ-டு : வானத்தின்மீது மயிலாடக் கண்டேன்.

7. ஏதேனுமொரு சொல்

சுவாகாவையும் இறுதியிற்கொண்டது ஒரு தமிழ்ப் பாட்டு.

8. ஏதேனுமொரு தொடர்மொழி

எ-டு : 'எப்படிப் பாடினரோ' வைப்பாடு.

9. ஒரு கிளவியம்

எ-டு : எல்லாம் நன்மைக்கே என்பதைப் பலர் ஒப்புக்கொள்வதில்லை. 10. கிளவியத்தையுள்ளிட்ட கிளவியம்;

எ-டு: எல்லாம் நன்மைக்கே என்பதைப் பலர் ஒப்புக்கொள்வ தில்லை என்பது உனக்குத் தெரியுமா?

இதில், 'எல்லாம் நன்மைக்கே' என்பது ஒரு கிளவியம். இதை உள்ளிட்ட கிளவியம், 'எல்லாம்... கொள்வதில்லை', என்பது.

எழுவாயடை வடிவுகள்

எழுவாயடை பின்வருமாறு பல வடிவுகளில் வரும்.

1. பெயரெச்சம்

எ-டு : போகிற (போக்கு) - தெரிநிலைப் பெயரெச்சம்

நல்ல (வழி) குறிப்புப் பெயரெச்சம்.