உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

2. வேற்றுமையேற்ற பெயர்

எ-டு : எனது (புத்தகம்).

3. பெயரொட்டு

குன்றத்துக் (கூகை).

எ-டு : பனை (மரம்

145

காவிரி (யாறு)

இங்குப் பெயரொட்டு

என்றது

இருபெயரொட்டில்

முதற்பெயரை.

4. சிறப்புப்பெயர்

எ-டு : சோழன் (கரிகாலன்)

புலவன் (வள்ளுவன்)

கணியன் (பூங்குன்றன்)

பல்வகைச் சிறப்புப்பெயரும் இவ்வகையுள் அடங்கும்.

5. குறிப்பு முற்றெச்சம்

எ-டு : கழலினன் (நள்ளி)

கழலினன் = கழலையணிந்த, கழலையுடைய

6.இடைச்சொல்

எ-டு : இன் (ஒன்று) = இன்னொன்று

மற்று (என்னை ?)

குறிப்பு : உண்மையில் இவை குறிப்புப் பெயரெச்சமேயன்றி இடைச்சொல் அல்ல; ஆயினும், தமிழிலக்கண நூல்களிற் குறிக்கப்பட்டுள்ளபடி இங்குக் குறிக்கப்பட்டன. 7. உரிச்சொல்

எ-டு : வடி (வேல்)

8. பண்புச்சொல்

வியன் (உலகம்)

வடி = கூர்மையான. வியன் = பரந்த.

எ-டு : செம், வட்ட தொகை

செம்மையான, வட்டமான – விரி

இவையும் நல்ல, பெரிய என்பவற்றைப்போலக் குறிப்புப் பெயரெச்சமேயாயினும், பண்புத்தொகை என ஒரு தனித்தொகை தமிழிற் கூறப்படுவதுபற்றி இங்கு வேறு பிரித்துக் கூறப்பட்டன.