உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

5

சொன்னால்மட்டும் அதன் பொருள் முடியும். 'வந்தான்', 'நல்லவன்’ என்பன கந்தன் என்னும் எழுவாயின் பொருள் நிற்குமிடம் அல்லது முடிந்து நிற்குமிடமாதலால், அவை அதன் பயனிலையாகும்.

பெயரெச்சமும்

வினையெச்சமுமாகிய

எச்சவினைகள்

எழுவாயின் பொருள் முடிந்து நிற்குமிடமல்லவாயினும், ஓரளவு அதன் பொருளைக்கொண்டு நிற்றலால் எச்சப் பயனிலை என்னும் பெயர்க்குரியவையாகும்.

ஆகவே, ஒரு வாக்கியத்திற்கு எழுவாய் பயனிலை ஆகிய இரண்டும் இன்றியமையாதவை என்பதும், அவற்றுள் எழுவாய் வாக்கியத்தைத் துவக்கும் சொல்லும் பயனிலை அதை (வாக்கி யத்தை) முடிக்கும் சொல்லும் ஆகும் என்பதும், அறியப்படும்.

எழுவாயும் பயனிலையும் சொல்லையுங் குறிக்கும்; பொருளையுங் குறிக்கும். பொருள், சொற்பொருள் பொருட்பொருள் என இருவகைப்படும். ஒரு சொல்லின் பொருட்பாடு (meaning) சொற்பொருள்; சொற்களால் நேரடியாய்க் குறிக்கப் பெறும் காட்சியுங் கருத்துமாகிய இருதிணைப்பொருளும் பொருட்பொருள்.

சொல்லையும் சொற்பொருளையும் குறிக்கும்போது, எழுவாயும் பயனிலையும் எச்சொல்லாகவும் இருக்கலாம். பொருட்பொருளைக் குறிக்கும்போது, எழுவாய் பெரும்பாலும் பெயர்ச்சொல்லாக விருக்கும்; பெயர்ச்சொல்லா யிருப்பின் முதல் வேற்றுமையிலேயே இருக்கும்; பயனிலை பெயராகவு மிருக்கும்; வினையாகவு மிருக்கும்.

எ-டு:

எழுவாய்

(1)

'மாதிரி' ஆங்கிலச்சொல் பெயர் விழைந்து விரும்பி வினையெச்சம்

(சொல்)

(2)

யானை மலையில் வாழும்.

பெயர்(பொருட்

முருகன் வள்ளியை மணந்தான்.

பொருள்)

பயனிலை

(1)

அவன் பெயர் அரங்கநாயகன்

பெயர் (சொல்)

(2)

விழைந்து விரும்பி - வினையெச்சம் (சொற்பொருள்)

(3)

அது மரம், அவன் சிவன்

பெயர்

மரம் வளர்கின்றது.

சிவன் நடிக்கின்றான்

பொருட்பொருள்

வினைமுற்று