உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

6

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

விழைந்து விரும்பி' என்பது ஒரு வாக்கியம். 'விழைந்து என்னும் சொல் விரும்பி என்று பொருள்படும்' என்பது இவ் வாக்கியத்தின் பொருள். இவ் வாக்கியம் இலக்கண முறைப்படி வ் சரியான தாயினும், தெளிவு நோக்கி ‘விழைதல் விரும்புதல்' என வினையெச்ச வடிவு தொழிற்பெயர் வடிவாக மாற்றி எழுதப் பெறும்.

மேற்காட்டிய வாக்கியங்களில் : 'மாதிரி', 'விழைந்து' என்னும் எழுவாய்களும், 'அரங்கநாயகன்' என்னும் பயனிலையும் அவ்வச் சொற்களையே குறித்தலையும்; 'யானை யானை', 'முருகன்' என்னும் எழுவாய்களும், 'மரம்', 'சிவன்', 'வளர்கின்றது', 'நடிக்கின்றான்' என்னும் பயனிலைகளும் பொருட்பொருள்களைக் குறித்தலையும்; 'விரும்பி' என்னும் பயனிலை சொற்பொருளைக் குறித்தலையும்

காண்க.

செயப்படுபொருள் குன்றாவினைகள் பயனிலையாக வரும் வாக்கியங்களில், எழுவாய் பயனிலையோடு செயப்படுபொருள் என வேறோர் உறுப்புமுண்டு.

எ-டு : சேரன் செங்குட்டுவன் கனகவிசயரை வென்றான், அதிகமான் ஔவையாருக்கு அருநெல்லிக்கனி யீந்தான்.

இவற்றுள், முதல் வாக்கியத்தில் 'கனகவிசயர் கனகவிசயர்' என்பதும், இரண்டாம் வாக்கியத்தில் 'அருநெல்லிக்கனி’ என்பதும்,

செயப்படுபொருளாம்.

செயப்படுபொருளைச் செய்பொருள் என்பதும் உண்டு.

செயப்படுபொருள் குன்றாவினைகள் செயப்படு பொரு ளின்றிப் பொருள் நிரம்பா. வென்றான் என்றால் யாரை வென்றான் என்றும், ஈந்தான் என்றால் எதை யீந்தான் என்றும் கேள்விகள் தாமாய் எழலையும்; கனகவிசயர் அருநெல்லிக்கனி என்னும் செயப்படுபொருள்களோடு கூடியே வென்றான் ஈந்தான் என்னும் வினைகள் பொருள் நிரம்புவதையும் காண்க.

செயப்படுபொருள் எப்போதும் இரண்டாம் வேற்றுமையி லேயே இருக்கும். சில வேளைகளில் அவ் வேற்றுமை யுருபு தொக்கு (மறைந்து) நிற்பதுமுண்டு. கனகவிசயரை என்பதில் ('ஐ' என்னும்)