உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

7

2ஆம் வேற்றுமையுருபு விரிந்து (வெளிப்பட்டு) நிற்பதையும், அருநெல்லிக்கனி என்பதில் அவ் வுருபு தொக்கு நிற்பதையும் காண்க.

செயப்படுபொருள் குன்றிய வினைகள் பயனிலையாக வரும்

வாக்கியங்களில், செயப்படுபொருள் இராது.

எ-டு : மருதன் வருகிறான், கராச்சியிலிருந்து இங்கிலாந்திற்கு வானவூர்தியிற் செல்ல இரண்டு நாள்கள் செல்லும்.

வ் வாக்கியங்களில், 'வருகிறான்', 'செல்லும்' என்பன செயப்படுபொருள் குன்றிய வினைகள். ஆதலால், இவற்றில் செயப்படுபொருள் இல்லை.

மேற்கூறியவற்றால், எழுவாய் பயனிலை செயப்படுபொருள் ஆகிய மூன்றும் வாக்கிய வுறுப்புகள் என்பதும், அவற்றுள் எழுவாயும் பயனிலையும் வாக்கியத்திற்கு இன்றியமையாதவை என்பதும், செயப்படுபொருள்

குன்றாவினை

பயனிலையானால்

செயப்படுபொருள் அமைந்தும், செயப்படுபொருள் குன்றியவினை பயனிலையானால் செயப்படுபொருள் அமையாதும் இருக்கும் என்பதும் அறியப்படும்.

எழுவாய் சில வாக்கியங்களில் தொக்கு நிற்பதுமுண்டு; அது தொகையெழுவாய் அல்லது தோன்றா எழுவாய் எனப்படும். (தொக்கு நிற்றல் = மறைந்து நிற்றல். தொகுதல் = மறைதல்.)

எ-டு :நாளைக்கு வருவேன்.

=

இதில் 'நான்' என்னும் எழுவாய் தொக்குநின்றது.

எழுவாய் தொகும் இடங்கள்

(1) உரையாட்டிலும், பேச்சிலும் மூவிடப் பதிற்பெயர்கள் (Per-

sonal Pronouns) தொகும்.

எ-டு: (நான்) ஒன்று சொல்கிறேன், (நீ) கேள்.

இனி (நாம்) நாளைக்கு என்ன செய்கிறது?

(நீ) என்ன சொன்னாய்?

(அவன்) நன்றாயிருக்கிறானா?

(அது) போனால் போகிறது.

(2) செய்தி வினவலில் செய்தி என்னும் சொல் தொகும்.