உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

எ-டு : (செய்தி) என்ன?

(3) வினாவிற் குறித்த எழுவாய் விடைகளில் தொகும்.

எ-டு : வினா : முச்சங்கம் இருந்தனவா?

விடை : (முச்சங்கம்) இருந்தன.

(4) மரபுச் செய்திகளையும் கேள்விச் செய்திகளையும் அறிவிக்கும் வாக்கியங்களில், அச் செய்தி கூறுவாரைக் குறிக்கும் எழுவாய் தொகும்.

எ-டு : (அறிஞர்) இடைச்சங்க நூலகத்தில் எண்ணாயிரத் தெச்சம் நூல்க ளிருந்தன என்பர்.

(மூத்தோர்) கூட்டத்தில் ஒருவரைச் சுட்டக்கூடாது என்று சொல்லுவர்.

(மக்கள்) விளக்கேற்றா வீட்டில் வேதாளம் குடிபுகும் என்பர்.

(சிலர்) இந்தியப் பொதுவுடைமைக் கட்சியார்க்கு இரசியாவி லிருந்து பணம் வருகிறதாகக் கூறுகின்றனர்.

(5) கணக்குதலைமைச் வாக்கியங்களில் முடிப்புச் சொல்லின் எழுவாய் தொகும்.

எ-டு : பத்தில் நான்கு போனால் (மீதி) ஆறு.

(6) தீவினையும் மடச்செயலும்பற்றி ஒருவரைக் கடியும் வினாவில், பொதுவாய் எழுவாய் தொகும். அவ் வெழுவாய் இடத்திற்கேற்ப மூவிடப்பொருள் எதுவாகவு மிருக்கலாம். ஆனால், வினா முன்பின் தொடர்பின்றிப் பழமொழிபோலத் தனித்து நிற்கும்போது, ஒருவன் என்னும் எழுவாயை வருவித்துக்கொள்வது நன்று. இத்தகைய எழுவாய்களைத் திட்டமற்ற எழுவாய்

என்னலாம்.

எ-டு : (நீ) பச்சைப்பிள்ளைக்கு இப்படி நெடுநேரம் பால் கொடாம லிருக்கலாமா?

(அவன்) பெற்றவள் பட்டினியிருக்கப் பிறருக் கெல்லாம் விருந்து வைக்கிறது சரியா?

(ஒருவன்) உண்ட வீட்டிற்கு இரண்டகம் பண்ணலாமா?

(ஒருவன்) மடிநிறையப் பணத்தை வைத்துக்கொண்டு தனிவழியே போகலாமா?

(7) விதிவிலக்குகளில் முன்னிலை யெழுவாயும் திட்டமற்ற எழுவாயும் தொகும்.