உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

66

எ-டு : “(நீ) செய்வன திருந்தச் செய்.'

99

(ஒருவன்) பலனை விரும்பினால்

பாடுபட வேண்டும்.

"(நீ) கண்டொன்று சொல்லேல்.

(ஒருவன்) அழுகிற ஆடவனையும்

சிரிக்கிற பெண்டையும் நம்பக்கூடாது.

விதி

விலக்கு

9

(8) தனிப்பட்ட மக்களியல்பையும் பொது உண்மையையும் கூறும் வாக்கியங்களில், மூவிடப் பதிற்பெயரும் திட்டமற்ற எழுவாயும் தொகும்.

எ-டு : (இவன்) இவனுக்கு வந்த விருந்தோ என்றிருக்கிறது.

(அவன்) கெஞ்சினால் மிஞ்சுவான், மிஞ்சினால் கெஞ்சுவான். (ஒருவன்) ஆடிக்கறக்கிற மாட்டைப்ஆடிக் கறக்கவேண்டும், பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்கவேண்டும்.

(நான், நீ, அவன்) இருந்தால் பூனை, எழுந்தால் புலி.

குறிப்பு : பழமொழிகளிற் குறிக்கப்படும் மக்களியல்பு எல்லார்க்கு முரியதாகவு மிருக்கலாம்; பலர்க்கோ சிலர்க்கோ வுரியதாகவு மிருக்கலாம்; ஒருவனுக்கே யுரியதாகவு மிருக்கலாம். பயனிலையின் பாலுக்கும் எண்ணுக்கும் ஏற்றபடி ஏதேனுமொரு பொது எழுவாய் வருவித்துக்கொள்ளலாம்.

(9) பழமொழிகளிலும் பழமொழிபோல் வழக்கூன்றிய சொலவுகளிலும், உலகறி எழுவாய்கள் தொகும்.

எ-டு : (ஆண்டவன்) ஆட்டுக்கும் வால் அளந்துதான் வைத்திருக் கிறான்.

(திருவையாற்றான்) பாடென்றால் பாடமாட்டானாம், பாடாதே என்றால் பாடுவானாம்.

(10) விடுகதைகளில் எழுவாய் தொகும்.

எ-டு : பச்சைப் பச்சென்றிருக்கும், பாகற்காயன்று; பக்கமெல்லாம் முள்ளிருக்கும், பலாக்காயன்று; உள்ளே வெளுத்திருக்கும், தேங்காயன்று; உருக்கினால் நெய் வடியும், நெய்யுமன்று.

இதன் எழுவாய் ஆமணக்கங்காய் என்பது.

(11) உண்மை கூறும் வாக்கியங்களில், எதிர்கால வினையெச் சத்தின் பின் வினையாலணையும்பெயர் அல்லது தொழிற்பெயர் தொகும். அவ் வினையாலணையும் பெயரும் தொழிற்பெயரும் அவ் எதிர்கால வினையெச்ச வினையடிப் பிறந்திருக்கும்.