உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

எ-டு : கொடுத்தால் (கொடுத்தவன்) நல்லவன்; கொடாவிட்டால்

(கொடாதவன்) கெட்டவன்.

சூடு முற்றினால் (முற்றினது) பித்தம்.

மலையில் விளைந்தால் விளைந்தது) மாகாளி, நாட்டில்

(6

விளைந்தால் (விளைந்து) நன்னாரி.

ஆகாத மாமியார்க்குக் கைபட்டால் (பட்டது) குற்றம்,

கால்பட்டால் (பட்டது) குற்றம்.

கொன்றால் (கொல்வது) பாவம்.

(12) நாலாம்

பிறசொல்லும் தொகும்.

வேற்றுமைக்குப்பின்

காலப்பெயரும்

எ-டு : இன்றைக்குத் திங்கள் = இன்றைக்குக் கிழமை திங்கள்.

=

அதைப்பற்றி உனக்கென்ன? = அதைப்பற்றி உனக்குக் கவலை என்ன?

இன்று திங்கள் என்னும் தொடரில், இன்று என்பதே பெயர்ச்சொல்லாயும், அதனால் எழுவாயாயும் இருக்கலாம்.

(13) உடல்நிலை, உளநிலை, சூழ்நிலை, வானிலை, காலநிலை, செல்வநிலை முதலிய பலவகை நிலைகளைக் குறிக்கும் வாக்கியங்களில், எழுவாய் தொகும்.

எ-டு : எனக்கு ஒருபடியாய் வருகிறது = எனக்கு உடல்நிலை ஒரு படியாய் வருகிறது.

அவருக்குக் கோபங்கோபமாய் வருகிறது = அவருக்கு

உளநிலை கோபங்கோபமாய் வருகிறது.

எனக்குச் சீயென்றிருக்கிறது = எனக்குச் சூழ்நிலை

சீயென்றிருக்கிறது.

(இவ்விடம்) புழுக்கமாயிருக்கிறது.

(நேரம்) இருட்டிவிட்டது.

(நிலைமை) சாப்பாட்டிற்குத் திண்டாட்டமாயிருக்கிறது.

(14) காலக் கழிவினாலும் வினைத்துய்ப்பினாலும் உண்மை யறியப்படுவதைக் குறிக்கும் வாக்கியங்களில், வினை யெச்சத்திற்கும் 'தெரியும்' என்னும் பயனிலைக்கும் இடையில், 'உண்மை' என்னும் எழுவாய் தொகும்.

எ-டு: போகப்போகத் தெரியும்.

யாராத்தாள் செத்தாலும் பொழுதுவிடிந்தால் தெரியும். பட்டால் தெரியும் முட்டாளுக்கு.