உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

11

இவற்றில், தெரியும் என்னும் பயனிலைக்குமுன் உண்மை என்னும் எழுவாய் தொக்குநிற்றல் காண்க.

நாளடைவில் தெரியும் என்னும் வாக்கியத்தில் நாளடைவில் என்பது வினையெச்சத்தொழில் செய்யும் தொடர்மொழியாகும்.

(15) உடம்பிற்கும் உறுப்பிற்கும் நேரும் ஊற்றைக் கூறும் வாக்கியங்களில், ஊறுசெய்யும் பொருள்களைக் குறிக்கும் எழுவாய் தொகும்.

(ஊறு

=

தீங்கு, சேதம்)

எ-டு : பட்ட காலிற் படும்.

இதில், படும் என்னும் பயனிலையைக்கொண்டு முடியும் எழுவாய் தொக்கது. அது கல், குச்சு, கால் முதலிய சொற்களில் எதுவாகவுமிருக்கலாம்.

(16) நிலைப்பாடு (condition) உணர்த்தும் ஏவலின் பின், விளைவு குறித்துவரும் பயனிலையின் எழுவாய் தொகும்.

எ-டு : கேளுங்கள், (கேட்பது) கொடுக்கப்படும்.

போங்கள், (அது) கிடைக்கும்.

சில வாக்கியங்களில் பயனிலை தொகுவதுமுண்டு. அது தொகைப் பயனிலை எனப்படும்.

பயனிலை தொகும் இடங்கள்

(1) விளைவு குறித்த வாக்கியங்களில், எதிர்கால வினை யெச்சத்தின் பின்வரும் எழுவாயின் பயனிலை தொகும்.

எ-டு : கிட்ட இருந்தால் முட்டப் பகை (நேரும்).

அகல இருந்தால் நிகள உறவு (உண்டாகும்).

அரணை தீண்டினால் மரணம் (நேரும்).

இடும்புக்குத் தின்றால் உடம்புக்குப் பலம் (உண்டாகும்).

ஆடிமாதம் அவரைபோட்டால் கார்த்திகை மாதம் காய் (காய்க்கும்).

விடுமுறையென்றால் இன்பம் (உண்டாகிறது), வேலை

யென்றால் துன்பம் (உண்டாகிறது).

இவ்வழி போனால் நாய் (இருக்கிறது), அவ்வழி போனால் முள் (இருக்கிறது).