உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

குறிப்பு : இவ் விதி, எழுவாய் தொகும் இடங்களைக் கூறும் விதிகளுட் பதினொன்றாவதுடன் முரணுவதுபோல அல்லது மயங்குவதுபோலத் தோன்றும். அத்தகைய முரண்பாடும் மயக்கமுமின்மை பொருள்நோக்கிக் கண்டுகொள்க.

'ஆடிமாதம்...காய்' என்னும் வாக்கியத்தில், போட்டது காய் என்று இசையாமையாலும்; 'இவ்வழி...முள்' என்னும் வாக்கியத் தில், போனது நாய், போவது முள் என்று இசையாமையாலும்; இவற்றிலும் இத்தகைய பிறவற்றிலும் எதிர்கால வினையெச் சத்திலிருந்து வினையாலணையும் பெயரும் தொழிற்பெயருமான தொகையெழுவாய் வருவிக்காது இறுதியில் ஒரு தொகைப் பயனிலையை வருவித்துக்கொள்ள வேண்டும்.

கொன்றால் (கொல்வது) பாவம் என்னும் வாக்கியத்தில், கொல்வது என்னும் தொழிற்பெயரும், பாவம் என்னும் இறுதிச் சொல்லும் ஒரே பொருளைக் குறித்தலையும்; ‘ஆடிமாதம்... காய்’ என்னும் வாக்கியத்தில் போட்டால் என்னும் வினையெச்சமும் காய் என்னும் இறுதிச்சொல்லும் காரண காரியமாக வெவ்வேறு பொருளையுணர்த்தலையும் காண்க.

ஆகவே, இத்தகைய வாக்கியங்களில், வாக்கியங்களில், வினையெச்சமும் இறுதிச்சொல்லும் ஒரே பொருளை யுணர்த்தும்போது தொகை யெழுவாய் வருவித்தல் வேண்டுமென்றும், காரணகாரியமாக வெவ்வேறு பொருளையுணர்த்தும்போது தொகைப் பயனிலை

வருவித்தல்வேண்டுமென்றும், அறிந்துகொள்க.

(2) உண்மையைக் கூறும் வாக்கியங்களில், நாலாம் வேற்றுமை யேற்ற பெயர்க்குப் பின்வரும் எழுவாய்களின் பயனிலை தொகும். எ-டு : இன்றைக்கு விடுமுறை (உண்டு), நாளைக்குப் பள்ளிக் கூடும் (2 600T (1).

அவனுக்குக் காய்ச்சல் (அடிக்கிறது).

கல்லார்க்கு இரண்டு கண் (உண்டு), கற்றார்க்கு மூன்று கண் (2 600T (11)!

இரு வீட்டிற்கு ஒரு முற்றம் (இருக்கிறது).

ஊழுக்குக் கூத்தன் (பாடுவான்), கூழுக்கு ஔவை (பாடுவாள்). தாட்டோட்டக்காரனுக்குத் தயிரும் சோறும் (கிடைத்தது), விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் பருக்கையும் (கிடைத்தது). அல்லது,

தாட்டோட்டக்காரனுக்குத் தயிரும் சோறும் விசுவாசக் காரனுக்கு வெந்நீரும் பருக்கையும் (கிடைத்தன).