உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

13

சோற்றுக்குத்தான் பஞ்சம் (உண்டு), சொல்லுக்குமா பஞ்சம் (உண்டு)?

'சோற்றுக்குப் பஞ்சம், சொல்லுக்கும் பஞ்சமா?' என்பதை, சோற்றுக்குப் பஞ்சம் உண்டு, சொல்லுக்கும் பஞ்சம் உண்டா?' என்று விரித்தல் வேண்டும்.

குறிப்பு : கல்லார்க்கு இரண்டு கண் என்பதை, கல்லார்க்குக் கண் இரண்டு என மாற்றினால், கண் என்பது எழுவாயும் இரண்டு என்பது பயனிலையும் ஆகிவிடும். இங்ஙனமே பெயருக்கும் பெயரெச்சத்திற்கும் பொதுவான எண்ணுச்சொற்கள் வரும் பிற வாக்கியங்களும் இரட்டுறல் நிலையடையும்.

எ-டு : ஒருவனுக்கு நாலு கால்.

ஒருவனுக்குக் கால் நாலு.

வற்றுள் : முன்னதில் 'நாலுகால்' என்பது பெயரெச்சத் தொடராகும்; பின்னதில் அது எழுவாய்த் தொடராகும்.

நாலுகால் என்பதையே

வினைமுற்றுத்தொடராகக்

கொள்ளின், அது பயனிலையும் எழுவாயுமாக மாறிவிடும்.

பயனிலை முன்னும் எழுவாய் பின்னும் வருவது வினைமுற்றுத்

தொடர்

ஒரு, இடந்தரா.

ரு முதலிய பெயரெச்ச வடிவுகள்* இரட்டுறலுக்கு

எ-டு : கல்லார்க்கு இரு கண் (உண்டு), கற்றார்க்கு முக்கண் (உண்டு). இதில், இருகண் முக்கண் என்பன பெயரெச்சத் தொடர். வை என்றும் இங்ஙனமே யிருக்கும்.

பெயரெச்சம் பெயரெச்சத்தொடர்.

முன்னும் பெயர் பின்னும் வருவது

(3) சிறந்த பொருள்களை எடுத்துக்கூறும் வாக்கியங்களில், நாலாம் வேற்றுமை அல்லது ஏழாம் வேற்றுமையேற்ற பெயர்க்குப் பின் வரும் எழுவாய்களின் பயனிலை தொகும்.

எ-டு : பட்டினத்திற்கு வீடும் பட்டிக்குக் காடும் (சிறந்தவை).

வில்லுக்கு ஓரி, சொல்லுக்கு மாவலி, கொடைக்குக் குமணன், நடைக்கு நக்கீரன் (சிறந்தவர்).

வில்லிற் சேரன், சொல்லிற் கீரன் (சிறந்தவர்).

வெண்பாவிற் புகழேந்தி, விருத்தத்திற் கம்பன் (சிறந்தவர்).