உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




164

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

பயிற்சி 4.

வினைமுற்றை வினையாலணையும் பெயராக்கும் வகையால், கீழ்வரும் தனிவாக்கிய இணைகளை ஒவ்வொரு தனி வாக்கியமாகச் சேர்த்தெழுதுக :

(1) அவன் நேற்றுப் பிறந்தான். அவனுக்கு என்ன தெரியும்?

(2) அங்கு ஒருவர் போகிறார். அவர் யார்?

(3)

(4)

(5)

சிலர் உழுதுண்டு வாழ்வார். அவரே வாழ்வார்.

ஒருவன் போன காரியத்தை நினைக்கிறான். அவன் புத்திகெட்டவன்.

ஒருவன் அலைகடலில் முழுகுகிறான். அவனுக்கு ஆற்றில் முழுகுவது அரிதா?

(6) துணிந்தவன் எவன்? அவனுக்குத் துக்கமில்லை.

(7) நலிந்தோர் யார்? அவருக்கு நாளும் கிழமையும் இல்லை. (8) இக் கனிகளுள் ஒன்று இனியது. அது எனக்கு.

பயிற்சி 5

ஓர் அல்லது பல வாக்கியத்தை அல்லது வாக்கியப் பகுதியைப் பெயரொட்டாக்கும் வகையால், கீழ்வரும் தனி வாக்கிய இணைகளை அல்லது தொகுதிகளை, ஒவ்வொரு தனிவாக்கிய மாகச் சேர்த்தெழுதுக :

(1) அ. இராமசாமிக் கவுண்டர் சேலங் கல்லூரித் தலைவரா யிருந்தார். அவர் பல்கலை வல்லார்.

(2) பிரகத்தன் ஓர் ஆரிய வரசன். அவனுக்குத் தமிழறி வுறுத்தற்குக் கபிலர் குறிஞ்சிப்பாட்டைப் பாடினார்.

(3)

(4)

(5)

செங்குட்டுவன் ஒரு சேரன். அவன் இந்தியா முழுவதையும் தன் அடிப்படுத்தினான்.

மதுரையில் ஒரு கணக்காயனார் இருந்தார். அவருக்கு ஒரு மகனார் இருந்தார். அவர் பெயர் நக்கீரனார். அவர் திரு முருகாற்றுப்படையை இயற்றினார்.

மனோன்மணீயத்தை இயற்றினவர் சுந்தரம் பிள்ளை. அவர் திருவாங்கூர் அரசர் கல்லூரியில் மெய்ப்பொருள் நூற் பேராசிரியரா யிருந்தார்.