உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

163

பயிற்சி 2

வினைமுற்றைப் பெயரெச்சமாக்கும் வகையால், கீழ்வரும் இ ணைகளை ஒவ்வொரு தனிவாக்கியமாகச்

தனிவாக்கிய

சேர்த்தெழுதுக:

(1) கனவிற் பணம் காணப்பட்டது. அது கைக்குதவுமா?

(2) உயிர் போனது. அது திரும்பி வராது.

(3) ஓலை வற்றினது. அது சலசலக்கும்.

(4)

அவனுக்கு ஒரு துன்பம் வந்தது. அவன் அதை எதிர் பார்க்கவில்லை.

(5) முயல் ஓடிப்போனது. அது பெரிய முயல்.

(6) நேற்று ஒரு கூட்டம் நடந்தது. அது மிகப் பெரியது.

(7)

ஒருவகை வேங்கை பாயாது. அது ஒருவகை மரம். (8) ஒரு மாடு துள்ளுகிறது. அது பொதி சுமக்கும்.

பயிற்சி 3

வினைமுற்றைத் தொழிற்பெயராக்கும் வகையால், கீழ்வரும் தனிவாக்கிய இணைகளை அல்லது தொகுதிகளை, ஒவ்வொரு தனிவாக்கியமாகச் சேர்த்தெழுதுக :

(1)

கம்பர் விருத்தம் பாடினார். அவர் அதில் தேர்ச்சி பெற்றார். (2) ஒவ்வொருவரும் உண்மை பேச வேண்டும். ஒவ்வொருவரும் அதையே விரும்பவேண்டும்.

(3) வள்ளுவர் ஓருயிரையும் கொல்லவில்லை. அவர் அதை வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்தார்.

(4) உயிர்கள் இறக்கும். அதை அவை தடுக்கமுடியாது.

(5)

(6)

(7)

(8)

வெள்ளாடு கருவேலங்காய் தின்னும். அது அதனால் கொழுக்கும்.

மாணவர் ஒழுங்காய்ப் படிக்கவேண்டும். அவர் ஒழுங்காய் நடக்கவேண்டும். அவர் இவற்றால் முன்னேறலாம்.

தலைமாணவன் தன் பாடங்களை ஒழுங்காய்ப் படிப்பான். அவன் அதில் கண்ணுங்கருத்துமா யிருப்பான்.

சர் ஏ. இராமசாமி முதலியார் ஆங்கிலத்தில் சொற்பொழி வாற்றுவார். அவர் அதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்.