உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




162

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

எ-டு : ஓரி ஒரு கொடையாளி. அவன் ஒரு வில்லாளி. அவன் ஓர் அறிஞன். அவன் ஒரு தமிழரசன்.

ஓரி ஒரு கொடையாளியும் வில்லாளியும் அறிஞனுமான தமிழரசன்.

கிளிமூக்கு வளைந்திருக்கும். அது கூராயிருக்கும். அது சிவப்பாயிருக்கும்.

கிளிமூக்கு வளைந்தும் கூராயும் சிவப்பாயும் இருக்கும்.

இனி, மேற்கூறிய வகைகளுள் பலவற்றை ஒருங்கே கையாண்டும், பல தனிவாக்கியங்களை ஒரு தனிவாக்கிய மாக்கலாம். எ-டு : நாகப்பன் கோட்டூரில் பிறந்தவன். அவன் இங்கிலாந்திற்குச் சென்றான். அவன் அங்குக் கல்வி கற்றான். அவன் தேறவில்லை. அவன் இங்குத் திரும்பிவந்தான்.

கோட்டூர் நாகப்பன் இங்கிலாந்திற்குச் சென்று கற்றும் தேறாமல் இங்குத் திரும்பிவந்தான்.

பயிற்சி 1

வினைமுற்றை வினையெச்சமாக்கும் வகையால், கீழ்வரும் தனிவாக்கிய இணைகளை அல்லது தொகுதிகளை, ஒவ்வொரு தனி வாக்கியமாகச் சேர்த்தெழுதுக :

(1) பாண்டவர் சூதாடினார். அவர் தம் நாட்டை இழந்தார். அவர் காட்டிற்குச் சென்றார்.

(2) சம்புலிங்கம் ஈயாத செல்வரைக் கொள்ளையடித்தார். அவர் ஏழைகட்குக் கொடுத்தார். அவர் பெயர் பெற்றார்.

(3)

(4)

(5)

(6)

(7)

ஆல்பிரடு நோபெல் ஒரு வெடிமருந்தைக் கண்டுபிடித் தார். அவர் பெரும்பொருள் ஈட்டினார். அவர் ஓர் உலகப் பெரும்பரிசு நிறுவினார்.

மாணவர் திருத்தமாகப் பேசவும் எழுதவும் வேண்டும். அவர் அதற்கு இலக்கணம் கற்க வேண்டும்.

யானை மதம் படலாம். அது அன்று பாகனுக்கு அடங்காது. அது அவனைக் கொல்லும்.

சேரமான்பெருமாள் நாயனார் யானை யேறினார். அவர் கயிலை சென்றார்.

நாளை நான் வானொலியிற் பேசவேண்டியிருக்கின்றது. நான் அதற்குத் திருச்சிராப்பள்ளி செல்லவேண்டும்.

(8) நண்டு கொழுக்கும். அது அதன்பின் வளையிலிராது.