உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

3. வினைமுற்றைத் தொழிற்பெயராக்கல்

எ-டு : இந்நகர வணிகரெல்லாரும் இன்று கடை யடைத்தார்கள் அவர்கள் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தார்கள்.

இந்நகர வணிகரெல்லாரும் இன்று கடையடைப்பால் தங்கள் வருத்தத்ததைத் தெரிவித்தார்கள்.

வழிச்செலவு முடிந்தது. கதிரவன் மறைந்தான்.

வழிச்செலவு (வழிச்செலவின்) முடிவில் கதிரவன் மறைந்தான்.

4. வினைமுற்றை வினையாலணையும் பெயராக்கல்

எ-டு : பந்தயத்தில் ஒருவன் முந்திவருவான். அவனுக்குப் பரிசு கிடைக்கும்.

பந்தயத்தில் முந்தி வருகிறவனுக்குப் பரிசு கிடைக்கும்.

5. ஒரு அல்லது பல வாக்கியத்தைப் பெயரொட்டாக்கல்

எ-டு : பாண்டித்துரைத்தேவர் இற்றை மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். அவர் பாற்கர சேதுபதியின் தமையனார்.

பாற்கர சேதுபதியின் தமையனார் பாண்டித்துரைத் தேவர் இற்றை மதுரைத் தமிழ்ச்சங்கத்தை நிறுவினார்.

6. ஒரு வாக்கியத்தை அடைமொழி அல்லது பின்னொட்டாக்கல் எ-டு : நாராயணசாமி ஐயர் நற்றிணையை வெளியிட்டார். அவர் பின்னத்தூரார்.

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் நற்றிணையை

வெளியிட்டார்.

தாசுமகாலைக் கட்டின சிற்பியின் கண் பிடுங்கப்பட்டது. இங்ஙனம் மக்கள் சொல்லுகிறார்கள்.

தாசுமகாலைக் கட்டின சிற்பியின் கண் பிடுங்கப்பட்டதாம்.

7. ஒன்றுக்கு மேற்பட்ட வினைமுற்றை விலக்கல்

எ-டு : நேற்றிரவு என் தோட்டத்தில் ஒரு திருடன் ஒளிந்து கொண் டிருந்தான். அவன் துப்பாக்கி வைத்திருந்தான்.

நேற்றிரவு என் தோட்டத்தில் ஒரு திருடன் துப்பாக்கியுடன் ஒளிந்துகொண்டிருந்தான்.

8. அடுக்கிணைப்புச் சொல்லால் சொற்களை இணைத்தல்

161

குறிப்பு : இவ் வகைக்குரிய வாக்கியங்கள் வினைப்பயனிலை கொண்டிருப்பின், அவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட வினை விலக்கப்படும்.