உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




160

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(24) அன்றெழுதினவன் அழித்தெழுதுவானா?

(25) அமரிக்கை ஆயிரம் பெறும்.

15. வாக்கிய ஒன்றுசேர்ப்பு

(Synthesis of Sentences)

பல தனி வாக்கியங்களை, ஒரு தனி வாக்கியமாகவேனும், ஒரு கூட்டு வாக்கியமாகவேனும், ஒரு கலப்பு வாக்கியமாகவேனும், ஒரு கதம்ப வாக்கியமாகவேனும், ஒன்றுசேர்ப்பது வாக்கிய ஒன்று சேர்ப்பு ஆகும்.

பல தனி வாக்கியங்களை ஒரு தனி வாக்கியமாக்கும்

வழிகள்

1. வினைமுற்றை வினையெச்ச மாக்கல்

எ-டு : அரங்கன் பல வீடுகள் கட்டினான். அவற்றை அவன்

வாடகைக்கு விட்டான். அவன் ஏராளமாய்ப் பணம் சேர்த்தான். அரங்கன் பல வீடுகள் கட்டி அவற்றை வாடகைக்கு விட்டு ஏராளமாய்ப் பணம் சேர்த்தான்.

அவன் இங்கு வருவான். அதை அவன் விரும்புகிறான்.

அவன் இங்கு வர விரும்புகிறான்.

மல்லிகை மலரும். அது அன்று மணம் தரும்.

மல்லிகை மலரின் மணம் தரும்.

கந்தன் வந்தான். அவன் உடனே திரும்பினான்

கந்தன் வந்தவுடனே திரும்பினான்.

அவன் நன்றாய்ப் படித்தான். அவன் தேறவில்லை.

அவன் நன்றாய்ப் படித்தும் தேறவில்லை.

அரசன் உறங்குவான். அவன் அன்றும் உலகைக் காக்கிறான்.

அரசன் உறங்கும்போதும் உலகைக் காக்கிறான்.

2. வினைமுற்றைப் பெயரெச்சமாக்கல்

எ-டு : மயில் ஒருவகைப் பறவை. அது மிக அழகானது.

மயில் மிக அழகான பறவை.

பிள்ளை தூங்குகிறது. அதை எழுப்பக்கூடாது.

தூங்குகிற பிள்ளையை எழுப்பக்கூடாது.