உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




166

(1)

(2)

(3)

(4)

(5)

(6)

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

ஞாலம் (பூமி) சுழன்றுகொண்டே யிருக்கிறது. அது கதிரவனைச் சுற்றிவருகின்றது.

ஏர்க்காட்டில் ஒரு செடி இருக்கிறது. அது பன்னீராண் டிற்கொரு முறைதான் பூக்கும்.

யானை போகிறது. அது ஆடியாடிப் போகிறது.

ஒருவன் தன் வேலையைச் செய்யவேண்டும். அவன் அதைச் செவ்வையாய்ச் செய்யவேண்டும்.

யானை மலையில் வாழும். அது அங்கு கூட்டங் கூட்டமா யிருக்கும்.

சென்னையில் பெருந்துத்தனார் (லம்போதரர்) என்ற ஓர்

சைவாணர் இருக்கின்றார். அவர் நன்றாய்ப் பாடுகின்றார். (7) சேலம் பண்டகர் (டாக்டர்) ராஜாராம் சிறந்த மருந்து கொடுப்பார். அவர் அதைக் கனிந்த வுள்ளத்துடன் கொடுப்பார்.

(8) இவ் வேலை என்னால் முடியும். அது ஒருவாரம் பொறுத்துத் தான் முடியும்.

பயிற்சி 8

அடுக்கிணைப்புச் சொல்லால் சொற்களை இணைக்கும் வகையால், கீழ்வரும் தனிவாக்கிய இணைகளை அல்லது தொகுதிகளை, ஒவ்வொரு தனி வாக்கியமாகச் சேர்த்தெழுதுக : (1) கற்பகப்பறவை பல வடிவாயிருக்கும். அது பல வண்ணமா யிருக்கும். அது பல அளவாயிருக்கும். அது மிக அழகா யிருக்கும்.

(2) திருவாளர் பாரதிதாசன் நன்றாய்ச் செய்யுளியற்றுவார். திருவாளர் தேசிகவிநாயகம் பிள்ளை நன்றாய்ச் செய்யு ளியற்றுவார். திருவாளர் இராமலிங்கம்பிள்ளை நன்றாய்ச் செய்யுளியற்றுவார்.

(3) இராவ்சாகிபு இரத்தினசாமிப் பிள்ளை கூட்டத்திற்கு வந்திருந்தார். டாக்டர் வரதராஜலு நாயுடு கூட்டத்திற்கு வந்திருந்தார்.

(4)

அ. இராமசாமிக் கவுண்டர் ஒரு நூலாசிரியர். அவர் ஒரு நூலாசிரியர் (போதகாசிரியர்). அவர் ஓர் உரையாசிரியர். அவர் ஒரு சிறந்த அறிஞர்.