உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

167

(5) தந்தை தன் குடும்பத்தார்க்குத் தெய்வம். அவன் அவர்க்கு அரசன். அவன் அவர்க்கு ஆசிரியன். அவன் அவர்க்கு நெருங்கிய உறவினன்.

(6) ஓய்மான் நல்லியக்கோடன் இரவலர்க்கு உணவளித்தான். அவன் அவர்க்கு உடையளித்தான். அவன் அவர்க்கு உடமையளித்தான். அவன் அவர்க்கு ஊர்தியளித்தான்.

(7) ஆலைத்துணி மெல்லியதாயிருக்கும். அது உறுதியாயிருக் கும். அது அழகாயிருக்கும். அது விலைகுறை வாயிருக்கும். அது நல்ல பொருள்.

(8) படங்கு ஒருவகைப் புறா. கரணன் (லோட்டின்) ஒருவகைப் புறா. முக்காட்டான் (கன்னியாஸ்திரீ) ஒருவகைப் புறா. விசிறிவாலி (லக்கா) ஒருவகைப் புறா. புக்கா ஒருவகைப் புறா. குமுறி ஒருவகைப் புறா. சுவரொட்டி ஒருவகைப் புறா.வானீலி (ஷாப்ஜா) ஒருவகைப் புறா. செம்புகரி (ஷீராஜ்) ஒருவகைப் புறா. காடன் (ஜங்கலீ) ஒருவகைப் புறா. திரிவான் (ரோமர்) ஒருவகைப் புறா. கொண்டையன் ஒருவகைப் புறா. தென்கண்டத்தான் (ஆஸ்திரேலியன்) ஒருவகைப் புறா.

பயிற்சி 9

மேற்காட்டிய பல முறைகளை ஒருங்கே கையாண்டு, கீழ்வரும் தனி வாக்கிய இ ணைகளை அல்லது தொகுதிகளை ஒவ்வொரு தனி வாக்கியமாகச் சேர்த்தெழுதுக :

(1)

(2)

(3)

கொல்லிமலையில் ஒரு செடி உள்ளது. அது ஆட்காட்டி எனப்படும். அது ஆள்வரவைக் காட்டும்.

காந்தியின் பெயரால் ஒரு முட்செடி இருக்கின்றது. அது புதிதாய் முளைத்தது. அது காலில் மிகுதியாய்த் தைக்கும்.

வீட்டு விலங்குகளுள் சில அமைதியானவை. அவற்றுள் ஒன்று ஆவு. அது மாந்தருக்கு மிகப் பயன்படுவது.

(4) திருமான் சிவசங்கர முதலியார் கன்னஞ்குறிச்சி வேள். அவரின் உறவினர் பண்டகர் (டாக்டர்) நமச்சிவாயம். அவர் மேகநோய் மருத்துவத் திறவோர். அவர் குடியிருப்பது சூரமங்கலம்.

(5)

சென்னை மாகாணத்தில் முதலமைச்சராயிருந்த (Premier) முதல் இந்தியர் இராமசாமியார். அவர் ஓமந்தூரார். அவர் இரெட்டியார் குலத்தினர். அவர் சிறந்த ஒழுக்க முள்ளவர். அவர் கட்டொழுங்குடையவர்.