உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




168

(6)

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

சூயசு கால்வாயை டீலெசெப்சு வெட்டினார். அவர் பிரெஞ்சுக்காரர். அவர் பெருந்திறவோர்.

(7) முதலாம் இராசராசன் தஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் கட்டினான். அவன் அதற்குப் பத்துகல் தொலைவு சாரம் அமைத்திருந்தான். இங்ஙனம் மக்கள் கூறுகின்றனர்.

(8) அறிவியல்நூல் ஒரு மறை. இசைநூல் ஒரு மறை. மருத்துவ நூல் ஒரு மறை. பிற கலைநூல்களும் மறைகள். இது தேற்றம். வாக்கிய ஒன்றுசேர்ப்பு (தொடர்ச்சி)

பல தனி வாக்கியங்களை ஒரு கூட்டு வாக்கியமாக்கும் வழிகள்: கூட்டு வாக்கியங்களிலுள்ள இணைப்புச் சொற்கள், (1) அடுக்கிணைப்புச் சொல், (2) மறுப்பிணைப்புச் சொல், (3) மறுநிலை யிணைப்புச் சொல், (4) முடிபிணைப்புச் சொல் என நால்வகைப்படுமென்று முன்னர்க் கண்டோம். அவற்றுள் ஒரு வகையைக்கொண்டு, தனிவாக்கியங்களை

வாக்கியமாக்கலாம்.

எ-டு :

(1)

(2)

(3)

(4)

பல

அடுக்கிணைப்புச் சொல்

ஒரு கூட்டு

மாதவி ஆடலில் வல்லவள். அவள் பாடலில் வல்லவள். மாதவி ஆடலிலும் வள்ளவள்; பாடலிலும் வல்லவள்.

சர் ஆ. இராமசாமி முதலியார் ஆங்கிலத்தில் நன்றாய்ப் பேசுவார். அவர் ஆங்கிலத்தில் நன்றாய் எழுதுவார்.

சர் ஆ. இராமசாமி முதலியார் ஆங்கிலத்தில் நன்றாய்ப் பேசவும் செய்வர்; எழுதவும் செய்வர்.

தென்மொழி மக்கள் மொழி. வடமொழி மக்கள் மொழி. தென்மொழியும் மக்கள் மொழி; வடமொழியும் மக்கள் மொழி. மக்கள் மொழி தென்மொழி மட்டுமன்று; வடமொழியு மாகும். திருமான் கோ. துரைச்சாமி நாயுடு இயந்திரப் புனைவு வல்லார். அவர் சிறந்த செல்வர்.

திருமான் கோ. துரைச்சாமி நாயுடு இயந்திரப் புனைவு வல்லார்; அதோடு, சிறந்த செல்வர்.

பிள்ளைகளைப் புறக்கணிப்பார் சிலர். அவர்களை விற்பார் உளர்.