உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

169

(1)

(2)

பிள்ளைகளைப் புறக்கணிப்பார் சிலர்; இனி, அவர்களை விற்பாரும் உளர்.

மறுப்பிணைப்புச் சொல்

விநோதரச மஞ்சரி மாணவர்க்கு நல்ல புத்தகம். அதில் வடசொற்கள் மிகுதியாக வுள.

விநோதரச மஞ்சரி மாணவர்க்கு நல்ல புத்தகம்; ஆனால், அதில் வடசொற்கள் மிகுதியாக வுள.

உண்மையான நண்பர் சொற்கள் கடுமையா

யிருக்கலாம். அவற்றில் அன்பு கலந்திருக்கும்.

உண்மையான நண்பர் சொற்கள் கடுமையா யிருக்கலாம்; ஆனாலும், அவற்றில் அன்பு கலந்திருக்கும்.

(3) அவன் என்னுடைய வேலைக்காரன்தான். நான் அவனை மதிப்பாய் நடத்துகிறேன்.

(1)

அவன் என்னுடைய வேலைக்காரன்தான்; இருந்தா லும், நான் அவனை மதிப்பாய் நடத்துகிறேன்.

துணி நல்லதுதான். அதற்கு இவ்வளவு விலையா?

துணி நல்லதுதான்; இருந்தாற்கூட, அதற்கு இவ்வளவு விலையா?

மறுநிலை யிணைப்புச் சொல்

நீ படிக்கவேண்டும். நீ எழுதவேண்டும்.

நீ இவ்விரண்டிலொன்று செய்யவேண்டும்.

நீ படிக்கவேண்டும்; அல்லது எழுதவேண்டும்.

(2) ஆள்வேண்டும். பொருள்வேண்டும் இவ் விரண்டில் முன்னது நல்லது .

(3)

ஆள்வேண்டும்; இல்லாவிட்டால் பொருளாவது வேண்டும்.

நீ போகவேண்டும். நான் போகவேண்டும். நம்மிருவருள் ஒருவர் போகவேண்டும்.

ஒன்று நீ போகவேண்டும்; இல்லாவிட்டால் நான் போக வேண்டும்.

(அல்லது)

நீ போகவேண்டும், ஒன்று; இல்லாவிட்டால் நான் போக வேண்டும், ஒன்று.

(அல்லது)