உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




170

(4)

(5)

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

போக

நீயாவது போகவேண்டும்; அல்லது நானாவது

வேண்டும்.

இங்கிலாந்திற்குக் கப்பலிற் செல்லலாம்.

அவ்விடத்திற்கு வானூர்தியிற் செல்லலாம்.

இங்கிலாந்திற்குக் கப்பலிலும் செல்லலாம்; வானூர்தி யிலும் செல்லலாம்.

நோயாளி மருந்துண்ணவேண்டும். அவன் பிழைக்க

மாட்டான்.

நோயாளி மருந்துண்ணவேண்டும்; இல்லாவிட்டால் பிழைக்கமாட்டான்.

முடிபிணைப்புச் சொல்

(1) இன்று மழை வரும். கூட்டத்தை முந்தி முடிக்க வேண்டும். இன்று மழை வரும்; ஆகையால், கூட்டத்தை முந்தி முடிக்க வேண்டும்.

(2) அவனுக்குக் காலில் முள் தைத்திருக்கிறது. அவனுக்கு நடக்க முடியவில்லை.

அவனுக்குக் காலில் முள் தைத்திருக்கிறது; அதனால், அவனுக்கு நடக்க முடியவில்லை.

(3) இருட்டில் விளக்கோடு செல்லவேண்டும். பூச்சி பொட்டை இருக்கும்.

(4)

(5)

இருட்டில் விளக்கோடு செல்லவேண்டும்; ஏனென்றால். பூச்சி பொட்டை யிருக்கும்.

மருதவாணனுக்கு வீடு இருக்கிறது. அவனுக்கு நிலம் இருக்கிறது. அவனுக்கு வட்டிப்பணம் வருகிறது. அவனுக்கு மாதச் சம்பளம் உண்டு. அவனுக்கு ஒரு குறைவும் இல்லை. மருதவாணனுக்கு வீடு இருக்கிறது; நிலம் இருக்கிறது; வட்டிப்பணம் வருகிறது; மாதச் சம்பளம் உண்டு; ஆகவே, ஒரு குறைவும் இல்லை.

பிஞ்சு ஐந்து. காய் எட்டு. பழம் பத்து. அழுகல் ஏழு. அவை மொத்தம் முப்பது.

பிஞ்சு ஐந்து; காய் எட்டு; பழம் பத்து; அழுகல் ஏழு; ஆக, மொத்தம் முப்பது.

குறிப்பு : (1) ஒரே எழுவாய்க்குரிய ஒரே வினையான பல பயனிலைகளை ஒரு பயனிலையாகச் சுருக்கின், பல தனிவாக்கியங்களும் ஒரு கூட்டு வாக்கியமும் ஒரு தனிவாக்கியமாக மாறிவிடும்.