உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல் எ-டு : மாதவி ஆடலில் வல்லவள். அவள் பாடலில் வல்லவள்.

- பல தனி வாக்கியம்.

மாதவி ஆடலிலும் வல்லவள்; பாடலிலும் வல்லவள்.

மாதவி ஆடலிலும் பாடலிலும் வல்லவள்.

- ஒரு கூட்டு வாக்கியம்.

- ஒரு தனி வாக்கியம்.

171

(2) சில வாக்கியங்கள், ஒரு கூட்டு வாக்கியம் போன்றும், பல தனிவாக்கியங்கள் போன்றும், தோன்றும். உறவுடைப் பொருள் களைப்பற்றிக் கூறுமவற்றை ஒரு கூட்டு வாக்கியமாகவும், உறவிலாப் பொருள்களைப்பற்றிக் கூறுமவற்றைப் பல தனிவாக்கியங்களாக வும் கொள்ளலாம்.

எ-டு : சேரனுக்கு

புலிக்கொடி;

விற்கொடி; சோழனுக்குப் பாண்டியனுக்கு மீன்கொடி - ஒரு கூட்டு வாக்கியம். செயங்கொண்டார் முதற் குலோத்துங்கள் காலத்தவர்; ஒட்டக்கூத்தர் இரண்டாங் குலோத்துங்கன் காலத்தவர்; கம்பர் மூன்றாங் குலோத்துங்கன் காலத்தவர் - ஒரு கூட்டு வாக்கியம். முருகனுக்குச் சேவற்கொடி. தருமனுக்கு முரசக் கொடி. உழவனுக்கு மேழிக்கொடி பல தனி வாக்கியம்.

சீத்தலைச்சாத்தனார் செங்குட்டுவன் காலத்தவர். பொய்யாமொழிப் புலவர் வணங்காமுடிமாறன் காலத்தவர். சேக்கிழார் மூன்றாங் குலோத்துங்கன் காலத்தவர் - பல தனி வாக்கியம்.

(3) ‘அவனால்', என்னும் காரணச்சொல், இரு கிளவியங்கட் கிடையில் தனித்தும் வரும்; முந்தின கிளவியத்தின் இறுதிச் சொல்லான தொழிற்பெயருடன் இணைந்தும் வரும். தனித்து வருவது கூட்டு வாக்கியம் என்றும், இணைந்து வருவது கலப்பு வாக்கியம் என்றும், அறிதல் வேண்டும்.

எ-டு : இன்று மழை வந்தது; அதனால் கூட்டமில்லை கூட்டு வாக்கியம்.

இன்று மழை வந்ததனால் கூட்டமில்லை கலப்பு வாக்கியம்.

பயிற்சி 1

கீழ்வரும் தனி வாக்கிய இணைகளை அல்லது தொகுதிகளை, அடுக்கிணைப்புச் சொல்லால் ஒவ்வொரு கூட்டு வாக்கியமாகச் சேர்த்தெழுதுக :