உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




172

(1) அம்பலவாணனுக்குத்

சொன்மதியில்லை.

உயர்தரக் கட்டுரை இலக்கணம் தன்மதியில்லை. அவனுக்குச்

(2) மக்கட்கு இன்னிசை விருப்பம். விலங்குகட்கு இன்னிசை விருப்பம்.

(3) இற்றிலருக்குப் பொருளாதார நெருக்கடி மிகுந்தது. அவருடைய படைகட்குள் ஒற்றுமை குலைந்தது.

(4) மக்கட்கு உணவு வேண்டும். அவர்க்கு உழைப்பு வேண்டும். (5) பலர் பெற்றோரைப் பேணுவதில்லை. பெற்றோரைப் புடைப்பார் உளர்.

(6) நான் இதைச் செய்யவில்லை. நான் அன்று இவ்வூரி லில்லை. (7) குடிகாரனுக்குப் பொருள்கெடும். அவனுக்கு மானம் போகும்.

(8) குயில் கூவினது. வேட்டைக்காரன் அதைப் போன்று கூவினான்.

(9) காடாண்டவர் பாண்டவர். நாடாண்டவர் பாண்டவர். (10) ம் மரத்தில் கனியில்லை. இதில் காயில்லை. இதிற் பூவில்லை. இதில் இலையில்லை.

(11) பல்லுயிரையும் படைக்கின்றவன் அவன். அவற்றைக் காக்கின்றவன் அவன். அவற்றை அழிக்கின்றவன் அவன். (12) காசுக்கிரண்டு குதிரைவேண்டும். அவை காற்றாய்ப் பறக்க வேண்டும்.

பயிற்சி 2

கீழ்வரும் தனிவாக்கிய இணைகளை அல்லது தொகுதிகளை, மறுப்பிணைப்புச் சொல்லால் ஒவ்வொரு கூட்டு வாக்கியமாகச் சேர்த்தெழுதுக:

(1)

கண்ணையன் மதிநுட்பமுள்ளவன். அவன் சோம்பேறி.

(2) சம்புலிங்கம் ஒரு கொள்ளைக்காரன். அவன் ஏழைகட்கு உதவினான்.

(3) ஆயிரம் வரலாம். இத்தனை ஆத்திரம் ஆகாது.

(4) பொழுது இருட்டிவிட்டது. நடக்கவேண்டிய வழி தூரம். (5) செல்வன் உயர்ந்த உணவு உண்கின்றான். அவன் நலமாயில்லை. ஏழை தாழ்ந்த உணவு உண்கின்றான். அவன் நலமாயிருக்கின்றான்.