உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

187

(2) தற்காலக் கொடையாளிகளுள் மிக்க புகழ்பெற்றவர்

(3)

ஆல்பிரடு நோபெல்.

நேர்மையான ஒழுக்கமுள்ளவர்க்குப்

பெரும்பாலும்

முன்னேற்றமில்லை.

(4)

து சென்னைக்கு நேரான வழி.

(5)

(6)

தஞ்சைப் பெருவுடையார் கோயிற் கோபுரம் அழகான தோற்றமுடையது.

து.

ச் சட்டை எனக்கேற்ற அளவெடுத்துத் தைக்கப்பட்ட (7) நாகரிகம் வளர வளர மூடநம்பிக்கையாளர் தாகை குறையும்.

(8) முரட்டுத்தனமான வேலைக்காரருக்கு உயர்ந்த சம்பளம்

தகாது.

பயிற்சி 4.

கீழ்வரும் வாக்கியங்களிலுள்ள

வினையெச்சங்களைப்

பெயரெச்சமாக மாற்றுக :

(1) மக்கள் பெற்றோர்க்கும் மாணவர் ஆசிரியர்க்கும் மனமார நன்றி செலுத்தவேண்டும்.

(2) நான் கேட்ட கேள்விக்கு விளக்கமாக விடைதர வேண்டும்.

(3)

(4)

(5)

(6)

அன்பாகப் பேசுவது அனைவருக்கும் இன்பந்தரும்.

மட்டாக வுண்ணுதல் மனத்திற்கு மகிழ்ச்சி.

எப்போதும் தேநீரைச் சூடாகக் குடிக்கவேண்டும்.

கள்ளத்தனமாய் விற்றுப் பொருளீட்டிய வணிகர் கழிபலர்.

(7) நோயற்று வாழ்வதே வாழ்வு.

(8) விளைச்சற் காலத்திற் பயிர்களை விழிப்பாய்க் காக்க வேண்டும்.

பயிற்சி 5

கீழ்வரும் வாக்கியங்களிற் கோடிட்ட சொற்களைப் பல்வேறு சொல்வகையாக மாற்றுக :

(1) காந்தியடிகள் இந்தியராற் கொல்லப்பட்டது இந்தியா விற்கே மானக்கேடு.

(2) வறுமையிலும் செம்மையாய் வாழவேண்டும்.