உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




186

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(3) இன்றைக்கு இறையுருவப் புறப்பாடு எத்தனை மணிக்கு?

(4) ஐம்பதில் ஆட்டம் அறுபதில் ஓட்டம்.

(5)

இற்றை வணிகத்தில் பல பண்டங்கட்கு அரசியற் கட்டுப் பாடு உண்டு.

(6) மதுரைப் பஞ்சாலைகளில் நேற்று வேலைநிறுத்தம் (7) ஆறுமுகத்திற்கு நாலுநாளாய்க் காய்ச்சல்.

(8)

து ஒரு பெரிய மானக்கேடு.

கீழ்வரும்

பெயராக மாற்றுக :

பயிற்சி 2

வினைமுற்றுக்களைப்

வாக்கியங்களிலுள்ள

(1) சில முயற்சியாளர் சிலவற்றைக் கண்டுபிடித்தனர். சில ஆராய்ச்சியாளர் சிலவற்றைப் புதிதாகப் புனைந்தனர். இவற்றால் உலகம் மிக முன்னேறியுள்ளது.

(2) கதிரவன் தோன்றி மறைகின்றது. இங்ஙனமே உயிர்களும் தோன்றி மறைகின்றன.

(3) கடவுள் நாள்தொறும் படைக்கின்றார், காக்கின்றார், அழிக்கின்றார்.

(4)

ஏ ன் என்னை அச்சுறுத்துகின்றீர்?

(5) ஆழ்வார்கள் நமக்குப் பல திருப்பாக்களை அருளிச் செய்தார்கள். அவற்றின் தொகுதியே நாலாயிர திவ்வியப் பனுவல் என வழங்குவது.

(6) உலகத்திற் பல பொருள்களின் இயல்பை வரையறுத் துள்ளனர்.

(7)

காணாமற்போதலைக் கூடப்போதல் என்று கோபிச் செட்டிப் பாளையத்தார் வழங்குகின்றனர்.

(8) 'செந்தமிழ்ச் செல்வி திங்கள் தொறும் வெளியிடப் படுகின்றது.

பயிற்சி 3

கீழ்வரும் வாக்கியங்களிலுள்ள பெயரெச்சங்களை வினை யெச்சமாக மாற்றுக:

(1) டார்வின் எழுதிய 'உயிரினத் தோற்றம்' எனக்கு விருப்ப மான புத்தகம்.