உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

(9) திருவெண்காடர் செல்வம் நிறைந்தவர். திருவெண்காடர் நிறைந்த செல்வர். திருவெண்காடர் நிறையச் செல்வமுள்ளவர். திருவெண்காடர் செல்வ நிறைவு உள்ளவர். ஒரு தேங்காயின் விலை நாலணா.

(10)

(11)

ஒரு தேங்காய் நாலணாவிற்கு விற்கும்.

மேனாட்டார் ஒழுங்காய் வாழ்பவர். மேனாட்டார் ஒழுங்கான வாழ்க்கையர்.

மேனாட்டார் வாழ்க்கையில் ஒழுங்கு உண்டு.

185

(12) காந்தியடிகட்குச் செல்லிய வினை (Surgical Operation) நிகழ்ந்த முக்கால் மணி நேரமும், தேசிய மக்கட்கு மிகக் கவலை யாய் இருந்தது.

காந்தியடிகட்குச் செல்லிய வினை நிகழ்ந்த முக்கால் மணி நேரமும், தேசிய மக்கட்கு மிகக் கவலை இருந்தது.

(13) பரிமேலழகர் உரையும் சிலவிடத்துத் தவறாக உள்ளது. பரிமேலழகர் உரையிலும் சிலவிடத்துத் தவறு உள்ளது. பரிமேலழகரும் சிலவிடத்துத் தவறான உரை கூறி யுள்ளனர்.

(14) அன்மொழித் தொகை ஆகுபெயரின் வேறுபட்டது. அன்மொழித் தொகைக்கும் ஆகுபெயர்க்கும் வேறுபாடு உண்டு.

அன்மொழித்தொகையும் ஆகுபெயரும் வேறுபட்ட லக்கண முறைகள்.

(15) திருக்குறள் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடையது.

திருக்குறள் சொற் சுருங்கியது; பொருள் பெருகியது. திருக்குறள் சொற் சுருங்கிப் பொருள் பெருகியுள்ளது. திருக்குறள் சொற் சுருங்கிய தன்மையும் பொருள் பெருகிய தன்மையும் உடையது.

திருக்குறள் சொற் சுருங்கிய அல்லது பொருள் பெருகிய நூல்.

பயிற்சி 1

கீழ்வரும் வாக்கியங்களிலுள்ள பெயர்களை வினையாக

அல்லது வினைமுற்றாக மாற்றுக:

(1) காந்தியடிகள் இறப்பும் சிலர்க்கு மகிழ்ச்சி.

(2) ஓரூர்ப் பேச்சு ஓரூர்க்கு ஏச்சு.