உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




184

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(1)

பாண்டிய நெடுஞ்செழியன் கோவலனைக் கொல்வித்தது, மதிக்குலத்தை மறுப்படுத்திற்று.

வெற்றிவேற் செழியன் கோவலனைக் கொல்வித்ததனால், மதிக்குலத்திற்கு மறு உண்டாயிற்று.

(2) உன்னைக் கண்டது எனக்குப் பெருமகிழ்ச்சி.

(3)

உன்னைக் கண்டு நான் பெரிது மகிழ்கின்றேன்.

ஒரு நூலை ஒருவர் மொழிபெயர்க்க வேண்டுமாயின், அந் நூலாசிரியர் அதற்கு உடன்பட வேண்டும்.

ஒரு நூலை ஒருவர் மொழிபெயர்க்கவேண்டுமாயின், அதற்கு அந் நூலாசிரியரின் உடன்பாடு வேண்டும்.

(4) என்றும் படித்துக்கொண்டிருப்பதே ஒருசிலர்க்கு இன்பம். என்றும் படித்துக்கொண்டிருப்பதனாலேயே ஒருசிலர் இன்புறுகின்றனர்.

என்றும்

படித்துக்கொண்டிருப்பதே

ன்பமான வாழ்க்ை கை.

ஒரு சிலர்க்கு

என்றும் படித்துக்கொண்டிருப்பதனாலேயே ஒருசிலர்

இன்பமாய் வாழ்கின்றனர்.

(5) இவன் வேகமாய் நடக்கின்றான்.

(6)

இவன் வேக நடையன்.

இவன் நடைக்கு வேகம் உண்டு.

இராமசாமிக்

வழிபடுவார்.

கவுண்டர் நாள்தொறும் கடவுளை

இராமசாமிக் கவுண்டர் நாள்தொறும் கடவுள் வழிபாடு செய்வார்.

இராமசாமிக் கவுண்டருக்கு நாள்தொறும் கடவுளை வழிபடுகிற வழக்கமுண்டு.

இராமசாமிக் கவுண்டர் நாள்தொறும் கடவுளை வழிபட்டு வாழ்ந்தார்.

(7) திருவரங்கம் பிள்ளை நல்ல குணம் உள்ளவர்.

திருவரங்கம் பிள்ளை குணம் உள்ளவர். திருவரங்கம் பிள்ளை குணம் நன்றாய் இருக்கிறது.

(8) அழகிரிசாமி சிறந்த பேச்சாளி.

அழகிரிசாமி சிறப்பாய்ப் பேசுவார்.

அழகிரிசாமி பேச்சிற் சிறந்தவர்.

அழகிரிசாமி பேச்சுச் சிறப்பு வாய்ந்தவர்.