உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

புலி பாய்ந்தது போன்று புல்லியும் பாய்ந்தான்.

புலிபோற் புல்லியும் பாய்ந்தான்.

- ஒரு கலப்பு வாக்கியம்

- ஒரு தனிவாக்கியம்

(4) ஆதன் நல்லவன். பூதன் நல்லவன். பின்னவன் மிக நல்லவன்.

ஆதன் நல்லவன்.

- பல தனிவாக்கியம்

நல்லவன்;

ஆனால்,

பூதன் அவனிலும் - ஒரு கூட்டுவாக்கியம்

ஆதன் நல்லவனா யிருத்தலைவிடப் பூதன் நல்லவனா

யிருக்கின்றான்.

ஆதனிலும் பூதன் நல்லவன்.

- ஒரு கலப்பு வாக்கியம்

- ஒரு தனிவாக்கியம்

183

(5) திருமலை நாயக்கர் பிறந்தாராம். ஒரு கழுதை பிறந்ததாம். இரண்டும் ஒரேநேரத்தில் நிகழ்ந்தனவாம்.

ஒரேநேரத்தில், திருமலை நாயக்கரும் பிறந்தாராம்; ஒரு கழுதையும் பிறந்ததாம்.

- பல தனிவாக்கியம்

- ஒரு கூட்டுவாக்கியம்

- ஒரு கலப்பு வாக்கியம்

-

'ஒரு தனிவாக்கியம்

திருமலை நாயக்கர் பிறந்தநேரத்தில், ஒரு கழுதையும் பிறந்ததாம்.

திருமலை நாயக்கரும் ஒரு கழுதையும் ஒரேநேரத்தில் பிறந்தனராம்.

(6) மருதன் மருத்துவம் பயின்றான். மாடலன் சட்டம் பயின்றான்.

மருதன் மருத்துவம் பயின்றான். பயின்றான்.

- பல தனிவாக்கியம்

மாடலனோ

சட்டம்

- ஒரு கூட்டுவாக்கியம்

மருதன் மருத்துவம் பயில, மாடலன் சட்டம் பயின்றான்.

-

- ஒரு கலப்பு வாக்கியம்

- ஒரு தனிவாக்கியம்

மருதனும் மாடலனும், முறையே, மருத்துவமுஞ் சட்டமும்

பயின்றனர்.

16. வாக்கிய வடிவு மாற்றம்

(Transformation of Sentences)

ஒரு வாக்கியத்தின் பொருளை மாற்றாமலே அதன் வடிவை அல்லது வகையை மாற்றுவது, வாக்கிய வடிவு மாற்றம் ஆகும்.

சொல்வகைப் பரிமாற்றம்

(Interchange of one Part of Speech for another)

பின் வரும் வாக்கியங்களை ஆய்க :