உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

191

ஆங்கில மல்லாத மற்றப் பாடங்களிலெல்லாம் தேறி விட்டான்.

ஆங்கிலம் நீங்கலாக மற்றப் பாடங்களிலெல்லாம் தேறிவிட்டான்.

(7) ஒழிய:

கேட்டாலொழியக் கிடையாது.

கேட்டாலன்றிக் கிடையாது.

கேளாவிட்டால் (கேளாதிருந்தால்) கிடையாது. கேட்டால் (கேட்டக்கால்) தான் கிடைக்கும். கேட்கும் பக்கம் (பட்சம்) தான் கிடைக்கும்.

(8) மட்டும்:

i. நான் மட்டும் நடந்துபோக வேண்டுமா? நான் ஒருவனே நடந்துபோக வேண்டுமா? ii. இந்நாள் மட்டும் அவன் வரவில்லை. இந்நாள் அளவும் அவன் வரவில்லை.

(9) ஆக:

இந்நாள் வரையும் (வரைக்கும்) அவன் வரவில்லை. இந்நாள் காறும் அவன் வரவில்லை.

i. தானாகச் செய்தான். தானே செய்தான்.

தனியனாய்ச் செய்தான்.

ii. தானாக வந்தான்.

அழையாமல் (ஏவப்படாமல்) வந்தான்.

தானாகக் கனிந்தது.

பழுக்க வைக்காமல் (இயற்கையாகக்) கனிந்தது.

(10) IT GOT:

i. அவன்தான் திருடன். அவனே திருடன்.

ii. நான் வரத்தான் செய்வேன்.

நான் வரத்தான் வருவேன்.

நான் வரவே வருவேன்.

நான் கட்டாயம் வருவேன்.

(11) உடன்:

நாலுமணியானவுடன் புறப்பட்டுவிட்டான்.

நாலுமணியானதும் புறப்பட்டுவிட்டான்.

நாலுமணியானதுதான், உடனே புறப்பட்டு விட்டான்.