உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




190

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

காடாயினும் வீடாயினும் வாங்கவேண்டும்.

காடாதல் (காடாகல்) வீடாதல் (வீடாகல்) வாங்க வேண்டும்.

காடெனினும் (காடேனும்) வீடெனினும் (வீடேனும்) வாங்க வேண்டும்.

காடென்றாலும் வீடென்றாலும் வாங்க வேண்டும். காடோ வீடோ வாங்கவேண்டும்.

(4) ஆகட்டும்:

ஒருவன் நல்லவனாகட்டும் கெட்டவனாகட்டும்; நாம் செய்ய வேண்டிய நன்மையைச் செய்துவிட வேண்டும். ஒருவன் நல்லவனாகுக, கெட்டவனாகுக; நாம் செய்ய வேண்டிய நன்மையைச் செதுவிடவேண்டும்.

ஒருவன் நல்லவனானாலும் கெட்டவனானாலும், நாம் செய்ய வேண்டிய நன்மையைச் செய்துவிட வேண்டும். ஒருவன் நல்லவனானாலும் சரி, கெட்டவனா னாலும் சரி; நாம் செய்யவேண்டிய நன்மையைச் செய்துவிட வேண்டும்.

ஒருவன் நல்லவனென்றாலும் கெட்டவனென் றாலும், நாம் செய்யவேண்டிய நன்மையைச் செய்துவிட வேண்டும்.

ஒருவன் நல்லவனென்றாலும்

சரி,

கெட்டவ

னென்றாலும் சரி; நாம் செய்ய வேண்டிய நன்மையைச் செய்துவிட வேண்டும்.

ஒருவன் நல்லவனோ கெட்டவனோ, நாம் செய்ய வேண்டிய நன்மையைச் செய்து விடவேண்டும்.

(5) கூட :

i. தை ஒரு சிறு பிள்ளைகூடச் செய்துவிடும். இதை ஒரு சிறு பிள்ளையும் செய்துவிடும். இதை ஒரு சிறு பிள்ளையே செய்துவிடும். ii. அண்ணன் கூடத் தம்பி போனான். அண்ணனோடு தம்பி போனான்.

(6) தவிர:

ஆங்கிலம் தவிர மற்றப் பாடங்களிலெல்லாம் தேறி விட்டான்.

ஆங்கிலம் ஒழிந்த மற்றப் பாடங்களிலெல்லாம் தேறி விட்டான்.