உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

193

ii. செய்யவேண்டா (வேண்டியதில்லை). செய்யத் தேவையில்லை.

செய்யாதே (செய்யாதீர்), செய்யற்க.

(17) மாட்டேன், மாட்டேம்:

வரமாட்டேன், வரமாட்டேம்.

வரமுடியாது.

வரேன் (வாரேன்), வரேம் (வாரேம்).

(18) செய்யட்டு, செய்யட்டும்:

அவன் செய்யட்டு, செய்யட்டும். அவனைச் செய்யவிடு, செய்ய விடும். அவன் செய்யட்டு (Thou let him do) ஒருமை.

-

அவன் செய்யட்டும் (You let him do) - பன்மை.

பயிற்சி 1

கீழ்வரும் வாக்கியங்களில் தடிப்பெழுத்துச் சொற்களுக்குப் பதிலாக, வெவ்வேறு சொல்லை அமைத்தெழுதுக:

(1) நாங்களெல்லாம் கணியம் (சோதிடம்) பார்த்து ஒன்றைச் செய்யமாட்டோம்.

(2) சும்மா உட்கார். அதைப்பற்றிக் குற்றமில்லை.

(3) ஓநாயாவது நரியாவது ஆட்டைக் கொண்டு போயிருக்க வேண்டும்.

(4) பங்கீட்டுக் கடைகளில், அரிசியளப்பவனுக்குக்கூடக் கையூட்டுக் கொடுக்க வேண்டும்.

(5)

நீ கேட்டது தவிர எல்லாம் கிடைக்கும்.

(6) வண்டி கொண்டுவந்தா லொழியப் போகக்கூடாது.

(7) இவனுக்கு மட்டும் இருபங்கு.

(8) நாள் முழுதும் சும்மா சுற்றிக்கொண்டு திரிகிறான்.

(9) உனக்கெல்லாம் மந்திரிப் பதவி கிடைக்குமா?

(10) மாணவர் தாமே கட்டுரை வரைந்துவிட்டனர்.

(11)

கொயினாப்பொடி கசக்கத்தான் செய்யும்; ஆனாலும், காய்ச்சற்காரன் அதை உட்கொள்ளத்தான் வேண்டும்.

(12) சும்மாவிருக்கிற நாயை வாலைப் பிடித்திழுக்கிறான்.