உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




194

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(13) புகைவண்டி நின்றதும், திருடன்

விட்டான்.

வெளியே குதித்து

(14)இன்றோ பிறகோ, நாம் கட்டாயம் ஒருமுறை ஆக்கிரா போய்வரவேண்டும்.

(15) என்னால் ஒரு நாளைக்கு இருபது குறள் மனப்பாடம் செய்ய முடியும்.

(16) நீ இனிமேல் கடன் கொடுக்கவேண்டா.

(17) முன்னறிவிப்பில்லாமல் என்னை ஒரு கூட்டத்திற்கும் கூப்பிடாதீர்கள்.

(18) தலைகீழாய் நின்றாலும், நான் என் மிதிவண்டியை ஒருவருக்கும் இரவல் கொடுக்கமாட்டேன்.

(19)நிலமே நீரே தீயே வளியே வெளியே எனப் பூதம் ஐந்து (20) உறவினனானாலும் அயலானானாலும், பந்தியில் உண்ண அமர்ந்தவனை வெளியேற்றக்கூடாது.

(21) தந்தையைக் கொன்ற பழி சும்மா போகுமா?

(22) காடன் புறா தானாய்க் காட்டிற்குப்போய் மேய்ந்து வரும். (23) இந்திய சமுதாயம் திருந்துவதற்கு இறைவனே

வர

வேண்டும்; அல்லது, ன்னோர் ஊழி வரவேண்டும் என்கின்றனர்.

(24) சிறியவனோ பெரியவனோ, யாரானாலும் சினத்தை அடக்க வேண்டும்.

நிலைப்பாட்டு வாக்கிய வடிவு மாற்றம்

(Ways of Expressing a Condition)

கீழ்வரும் வாக்கியங்களை ஆய்க :

(1) நோயாளி மருந்துண்டால் (மருந்துண்ணின்) பிழைப்பான். (2) நோயாளி மருந்துண்டு பிழைப்பான். நோயாளி மருந்துண்ணப் பிழைப்பான். நோயாளி மருந்துண்பானாயின் பிழைப்பான். நோயாளி மருந்துண்ணும்பக்கம் பிழைப்பான். நோயாளி மருந்துண்ணுங்கால் (மருந்துண்டக்கால்) பிழைப்பான்.

நோயாளி மருந்துண்கிறதாயிருந்தால் பிழைப்பான். நோயாளி மருந்துண்ணாவிடின் பிழையான். நோயாளி மருந்துண்ணாக்கால் பிழையான். நோயாளி மருந்துண்ணானாயின் பிழையான். நோயாளி மருந்துண்டாலொழியப் பிழையான்.