உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

195

மேற்காட்டியவற்றுள் இறுதி நான்கும் எதிர்மறை வடிவி

லுள்ளவை.

(2) அவன் இவ்வழி போனான், செத்தான்.

நீ உன் வாயைத் திறந்தாய், உன் மதிப்புப் போய்விடும்.

அவன் ஏன் சொல்லைக் கேட்கவில்லை, இனிமேல் ஓர் உதவியும் அவன் என்னிடம் பெற முடியாது.

இவற்றில், 'போனான்', 'திறந்தாய்', 'கேட்கவில்லை' என்னும் இறந்தகால முற்றுகள், முறையே 'போனால்', 'திறந்தால்' ‘கேட்காவிடில்' என எச்சப்பொருள் படுவன.

(3) கேள், கிடைக்கும்.

முயற்சி செய், வெற்றி பெறலாம்.

படி, தேறுவாய்.

இவற்றில், ஏவல் வினைகள் எதிர்கால வினையெச்சப் பொருள்படுவன.

(4) நீ இயந்திரக் கல்லூரியிற் சேர விரும்புகின்றாயா? அப்படியானால், கணக்குப் பயிலவேண்டும்.

,

நீ விரைந்து ஊருக்குச் செல்லவேண்டுமா? அப்படியானால், முதல் வண்டியில் ஏறிக்கொள்.

அவர் வருமானவரி அதிகாரியா? அப்போது, அவரிடம் பணம் வாங்காதே.

இவற்றில், வினாச்சொல்லும் 'அப்படியானால்' அல்லது 'அப்போது' என்னும் இணைப்புச் சொல்லும் சேர்ந்து நிலைப் பாட்டை உணர்த்தும்.

வரும்.

இத்தகைய வாக்கியங்களில்

ணைப்புச்சொல் தொக்கும்

எ-டு : நீ இயந்திரக் கல்லூரியிற் சேரவேண்டுமா? கணக்குப்பயில்.

(5) ஒரு நெருங்கிய உறவினர் வந்தார் என்று வைத்துக் கொள்வோம்; அவருக்குத் தங்க இடம் கொடுத்துத்தானே ஆகவேண்டும்?

இன்றைக்குச் சொற்பொழிவாளர் வரவில்லை என்று வைத்துக் கொள்வோம்; யார் சொற்பொழிவாற்றுகிறது?

இவற்றில், 'வந்தார் என்று வைத்துக்கொள்வோம்' என்பது 'வந்தால்' என்றும், 'வரவில்லை என்று வைத்துக் கொள் வோம்' என்பது 'வராவிடில்' என்றும் பொருள்படுவது காண்க.