உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




196

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

இத்தகைய வாக்கியங்களில், 'என்று வைத்துக்கொள்வோம்' என்னும் தொடர் தொக்கும் வரும்.

எ-டு : ஒரு நெருங்கிய உறவினர் வந்தார்; அவருக்குத் தங்க இடம் கொடுத்துத்தானே ஆகவேண்டும்.

பயிற்சி

கீழ்வரும் வாக்கியங்களைப் பல்வேறு வடிவில் மாற்றி யமைக்க

(1) மழை பெய்யக் குளம் நிறையும்.

(2) மணியடித்து வண்டி புறப்படும்.

(3) உனக்குப் புத்தகம் வேண்டுமா? முன்பணங் கொடு.

(4) என் தந்தையார் இதுவரை யிருந்திருந்தால், என் குடும்ப நிலை முற்றும் வேறுபட்டிருக்கும்.

(5)

ஒரு சொல் சொல்லுங்கள்; உடனே வேலை கிடைக்கும்.

(6) அவன்மட்டும் என்னை எதிர்த்துப் பேசினான்; அவன் படுகிற பாட்டைப்பார்.

(7) நீ அந்த நிலையில் இருந்தாய்; அப்போது என்ன செய்வாய்? (8) எல்லாரும் பல்லக்கேறினால் யார் பல்லக்குத் தூக்குகிறது? (9) உத்தரவின்றி உள்ளே போகக்கூடாது.

(10) திடுமென்று ஏதேனும் நேர்ந்ததென்று வைத்துக் கொள் வோம்; யாரிடம் போய்ப் பணங் கேட்பது?

(11) திருவாளர் ஆறுமுக முதலியார் தேர்தலுக்கு நிற்கும் பக்கத் தில், நான் என் பெயர்க் குறிப்பீட்டை (Nomination) மீட்டுக்கொள்கின்றேன்.

(12) முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

(13) இல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.

(14) விரையொன்று போடச் சுரையொன்று முளைக்குமா? (15) பணமிருந்தால் மனமிராது; மனமிருந்தால் பணமிராது. (16) பயிரிடு, பலன் தரும்.

(17) வாய் நல்லதாயின் ஊரும் நல்லது.

(18) நீ விடுதியிற் சேர விரும்புகின்றாயா? அப்படியானால், உடனே பணங்கட்டிப் பதிவு செய்துகொள்.