உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

197

(19)இப்போதுள்ள அறிவு என் இளமையில் இருந்திருந்தால், நான் இந்த வேலைக்கு வந்திருக்க மாட்டேன்.

(20) சிறிதுநேரம் விழிப்பாயிருங்கள்; பின்பு காலமெல்லாம் கவலையற்றிருக்கலாம்.

(21) சிலர் துன்பம் வந்தாலொழியக் கடவுளை நினைப்பதில்லை. (22) தூண்டுதலின்றிப் பலர் தொழில் செய்யார்.

(23) உனக்கு ஒரு பெரிய புதையல் கிடைத்தது; நீ என்ன செய்வாய்?

(24) நான் பிந்தி வருவதாயிருந்தால் கடிதம் எழுதுகிறேன்; திடுமென்று புறப்பட்டால் தொலைவரி (தந்தி) விடுக் கின்றேன்.

(25) நேர்நின்று காக்கை வெளிதென்று ஒருவன் சொல்வா னாயின், அவனைப்பற்றி என்ன சொல்வதற்கிருக்கின்றது? இணக்க அல்லது மாறுகோள் வாக்கிய வடிவு மாற்றம் (Ways of Expressing a Concession or Contrast)

கீழ்வரும் வாக்கியங்களை ஆய்க :

(1) பேதை படித்தும் பயனில்லை.

கீரன் கெட்டிக்காரனா யிருந்தும் தேறவில்லை.

இத்தகைய வாக்கியங்கள் உம்மை தொக்கும் வரும்.

எ-டு :

(2)

கீரன் கெட்டிக்காரனாயிருந்து தேறவில்லை.

குற்றவாளி அரசன் மகனாயிருந்தாலும் அவனைத் தண்டித்தல் வேண்டும்.

அவன் என்ன சொன்னாலும் கேட்கிறதில்லை.

அறிவிலி ஒன்றும் செய்யாவிட்டாலும் அமைதியா யிருந்தால் போதும்.

கல்லானாலும் கடவுட் படிமை வணங்கப்பெறும்.

(3) சீராளன் சிறுபிள்ளையா யிருந்தாற்கூடச் செவ்வையாய்ப் பேசுகிறான்.

சில வாக்கியங்களில், ‘ஆனாலும்' என்னும் சொல் தொக்கு வரும்.

எ-டு : சாண்பிள்ளை ஆண்பிள்ளை மாண்பிள்ளை.

(4)

காந்தியடிகள் தவறு செய்தார் என்று வைத்துக்கொண்டாலும், அவரைச் சுட்டுக்கொல்வது முறையா?