உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




198

(1)

(2)

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(5)ஓமந்தூர் இரெட்டியார் மிகக் கண்டிப்பானவர்தான்; இருந் தாலும் (இருந்தபோதிலும்,) அவரிடத்தில் நேர்மை மிகுதி.

மிகமிகக்

நெப்போலியன் குற்றவாளிதான்; என்றாலும் (என்ற போதிலும், என்றாற்கூட) அவனுக்கு இட்ட தண்டனை கடுமையானதாகும்.

ஆறுமுகத்திற்கு முகத்தில் வந்தது சிறு கொப்புளம்தான்; ஆனாலும் (ஆனபோதிலும்), அது அவனுக்கு அளவிறந்த வேதனையைத் தந்து அவனைக் கொன்றுவிட்டது.

பயிற்சி

கீழ்வரும் வாக்கியங்களைப் பல்வேறு வடிவில் மாற்றிய மைக்க: மெய்கண்டார் அருணந்தி சிவாச்சாரியாருக்கு மிக ளையவர்; ஆயினும், மெய்யுணர்ச்சியில் அவரினும் விஞ்சியவர்.

அவன் ஆண்டில் இளைஞனேனும் அறிவில் முதியன். (3) பிழைக்க வழி தெரிந்தும் நீ ஏன் இப்படிக் கெட்டுப் போனாய்?

(4)

(5)

மணிமன்றவாணன் படித்தற்கு வேண்டிய வசதிகளெல்லாம் பெற்றிருந்தும் படிக்கவில்லை.

ஆயிரம் உடுக்கள் சேர்ந்தாலும் ஒரு திங்களுக்கு நிகராகுமா? (6) அரசன் தெய்வத்தன்மையுள்ளவன் என்று வைத்துக் கொண்டாலும், அவனுடைய மகளை ஒரு சிறந்த புலவன் மணப்பது அவமானமாகுமா?

(7) குலோத்துங்கச் சோழன் எத்துணைக் கோபங் கொண் டிருந்திருப்பினும், அம்பிகாபதியைக் கொன்றது அளவிறந்த கொடுமையாகும்.

(8) ஒருவன் அகங்காரமே

வடிவெடுத்து வந்தாற்போன்

ஒரு

றிருந்தாலும், ஒரு மாங்கனியை எடுத்ததற்காக மங்கையைக் கொல்ல அவனுக்கு மனம் வருமா?

ஒப்பீட்டுத்தரப் பரிமாற்றம்

கீழ்வரும் வாக்கியங்களை ஆய்க :

ஒப்புத்தரம் : திருக்குறளைப் போன்ற அறநூல் வேறொன்று

மில்லை.

உறழ்தரம் : திருக்குறள் மற்றெல்லா அறநூல்களினும்

சிறந்தது.